இந்திய எல்லையோரம் அதிக உயர ஆயுதங்களை சோதனை செய்த சீனா !!

சீனா சமீபத்தில் இந்திய எல்லையோரம் இமய மலைப்பகுதியில் மேற்கொண்ட போர் ஒத்திகைகளை பற்றி ஞாயிற்றுக்கிழமை அன்று சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

CCTV தொலைக்காட்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட காணொளியில் மேற்கு தியேட்டர் கட்டளையகத்தின் ஒரு பிரிவான ஸின்ஜியாங் ராணுவ மாவட்டத்தால் நடத்தப்பட்ட போர் பயிற்சியில்

சுமார் 17,000 அடி உயரத்தில் காரகோரம் மலைத்தொடரின் மீது துல்லிய தாக்குதல் போர் பயிற்சிகளை சீன ராணுவம் மேற்கொண்ட காட்சிகள் உள்ளன.

ஸ்னைப்பர் துப்பாக்கிகள், மோர்ட்டார்கள், கிரனேடு லாஞ்சர்கள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த போர் பயிற்சிகளை சீன.ராணுவம் நடத்தி உள்ளது.

இது பற்றி மகாவ் நகரத்தை சேர்ந்த ராணுவ பார்வையாளரான ஆந்தனி வாங் டாங் பேசும்போது இந்திய எல்லையோரம் எதிர்கால சூழல்களுக்கு தயாராகும் விதம் இப்பயிற்சிகள் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

பெய்ஜிங் நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் யுவான் வாங் ராணுவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆய்வாளராக பணியாற்றும் ஜூ சென்மிங் பேசும்போது,

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் புதிய ஆயுதங்கள் அனைத்துமே இந்திய எல்லை காவல் நிலைகள், ராணுவ தளவாடங்கள் மற்றும் இதர இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டவை என்றார்.