வேகமாக அணு ஆயுதங்களை தயாரித்து வரும் சீனா பெண்டகன் அதிர்ச்சி ரிப்போர்ட் அணு ஆயுத போட்டிக்கு வித்திடுமா ??

  • Tamil Defense
  • November 4, 2021
  • Comments Off on வேகமாக அணு ஆயுதங்களை தயாரித்து வரும் சீனா பெண்டகன் அதிர்ச்சி ரிப்போர்ட் அணு ஆயுத போட்டிக்கு வித்திடுமா ??

அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றில் சீனா மிக வேகமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவது பற்றியும்,

2027ஆம் ஆண்டு வாக்கில் உடனடியாக பயன்படுத்தக்கூடிய 700 அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் எனவும், 2030ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 1000 அணு ஆயுதங்களை சீனா பெற்றிருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இது இதற்கு முன்னர் பெண்டகன் கணித்ததை விட பன்மடங்கு அதிகமாகும் அதாவது இதற்கு முந்தைய கணிப்பில் சீனா 2030ஆம் ஆண்டு வாக்கில் 400 அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போதைய கணிப்பில் முந்தயை பெண்டகன் ஆய்வு அறிக்கையில் கணிக்கப்பட்டதை விடவும் சுமார் 600 அணு ஆயுதங்கள் கூடுதலாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.

இது போக சீனா இந்த அணு ஆயுதங்களை ஏவும் தரை வான் மற்றும் கடல் சார்ந்த தளவாட அமைப்புகளிலும் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறது.

மேலும் ஏற்கனவே அமெரிக்கா ரஷ்யா இந்தியா ஆகிய நாடுகளை போன்றே முப்பரிமாண அணு ஆயுத தாக்குதல் திறனையும் “NUCLEAR TRIAD” பெற்றுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.

இந்த அதி வேகமான அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான புளுட்டோனியம் தயாரிப்பு மற்றும் பிரித்தெடுத்தலில் பெருமளவில் பயன்படும் FAST BREEDER ரக அணு உலைகளையும் மறுசுழற்சி நிலையங்களையும் கட்டமைத்து வருகிறது.

இது தற்போது இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் ஜப்பான் ஆஸ்திரேலியா அமெரிக்கா தைவான் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை சுட்டி காட்டுகிறது.

சீனாவின் இந்த செயல்கள் நிச்சயமாக அணு ஆயுத பெருக்கத்திற்கு வித்திட்டாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை காரணம் இது மிகப்பெரிய பாதுகாப்பு சவால் ஆகும்.

இந்த அறிக்கை அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஆக்கஸ் ஒப்பந்தம் மற்றும் க்வாட் அமைப்பு ஆகியற்றை அர்த்தம் மிகுந்ததாக மாற்றியுள்ளது என்றால் மிகையல்ல.