சீனா அதன் எல்லையோர நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது-அமெரிக்க செனட்டர் !!

  • Tamil Defense
  • November 18, 2021
  • Comments Off on சீனா அதன் எல்லையோர நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது-அமெரிக்க செனட்டர் !!

அமெரிக்க செனட்டர் ஜாண் கார்னின் சமீபத்தில் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்ட நிலையில் தனது அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில் அவர் சீனா இந்தியாவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் அதன் எல்லையோர நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சீனா எல்லையோர பிரச்சினைகளில் ஈடுபட்டு உள்ளதாகவும், சர்வதேச கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இந்தியா மற்றும் தைவானுடன் மோதல்களில் ஈடுபட்டு உள்ளதாகவும்,

உள்நாட்டிலேயே பல கொடுரமான செயல்களில் குறிப்பாக உய்குர் மக்களுக்கு எதிராக பெரும் கொடுமைகள் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்ற போது அந்நாட்டு கடற்படை ரோந்து விமானத்தில் பயணிக்கையில் ஃபிலிப்பைன்ஸ் கடற்பகுதிக்குள் சீன கலன் ஒன்று தகவல் சேகரிப்பில் ஈடுபட்டதை கண்டதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.