சீனா பற்றிய அமெரிக்க பாராளுமன்ற குழுவிற்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் சமர்பித்த அறிக்கை ஒன்றில் பல முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
அந்த வகையில் சீனா இந்தியா மற்றும் அமெரிக்க இடையேயான ஆழமான உறவுகளை விரும்பவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அமெரிக்க தரப்பை சீன தரப்பு இந்தியா மற்றும் சீனா இடையேயான பிரச்சினையில் தலையிட வேண்டாம் எனவும் தனது எல்லையோர உரிமைகளை நிலைநிறுத்தும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.