தொலைதூர ராக்கெட் தாக்குதல் அமைப்பை இந்திய எல்லையோரம் நிறுத்திய சீனா !!

  • Tamil Defense
  • November 8, 2021
  • Comments Off on தொலைதூர ராக்கெட் தாக்குதல் அமைப்பை இந்திய எல்லையோரம் நிறுத்திய சீனா !!

PCH-191 எனும் கனரக தொலைதூர ராக்கெட் தாக்குதல் அமைப்பை இந்திய எல்லையோரம் சீன ராணுவம் நிலைநிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பில் நான்கு 370மில்லிமீட்டர் ராக்கெட்டுகளை ஏவக்கூடிய குழல்கள் இரண்டு பிரிவுகளாக இருக்கும்.

இதுதவிர ஐந்து 300 மில்லிமீட்டர் ஏவு குழல்களை கொண்ட ஒரு பிரிவும், 750 மில்லிமீட்டர் ஏவு குழல்களை கொண்ட ஒரு பிரிவையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த PCH-191 அமைப்பு தரை மற்றும் கடல்சார் இலக்குகளையும் தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.