பாகிஸ்தானுக்கு ஸ்டீல்த் போர்க்கப்பலை டெலிவரி செய்துள்ள சீனா

  • Tamil Defense
  • November 9, 2021
  • Comments Off on பாகிஸ்தானுக்கு ஸ்டீல்த் போர்க்கப்பலை டெலிவரி செய்துள்ள சீனா

பெரியதும் ஸ்டீல்த் தொழில்நுட்பம் கொண்டதுமான பிரைகேட் போர்க்கப்பலா ஒன்றை திங்கள் அன்று சீனா பாகிஸ்தானுக்கு டெலிவரி செய்துள்ளது.இது சீனா- பாக் உறவு பறைசாற்றுவதாக சீன மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா பாகிஸ்தானிற்காக நான்கு டைப்-054 ஸ்டீல்த் பிரைகேட் ரக கப்பல்களை கட்டி வருகிறது.இதில் முதல் கப்பலான பிஎன்எஸ் துக்ரில் தற்போது டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

சீனாவீன் ஸ்டேட் சிப் ஃபில்டிங் கார்பசேன் லிமிடெட் நிறுவனம் இந்த போர்க்கப்பல்களை கட்டி வருகிறது.ஷாங்காயில் நடைபெற்ற விழாவில் இந்த பிரைகேட் கப்பலை பாகிஸ்தானிற்கு சீனா டெலிவரி செய்துள்ளது.

முந்தைய சீனக் கப்பல்களை விட இந்த கப்பல்கள் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் சக்திமிக்க ரேடார்கள் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றை பெற்றிருப்பதாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.