புதிய ஏவுகணை ரெஜிமென்டுகள் மற்றும் புதிய சாலைகளை அமைக்கும் சீனா- அதிர்ச்சி ரிப்போர்ட்

  • Tamil Defense
  • November 29, 2021
  • Comments Off on புதிய ஏவுகணை ரெஜிமென்டுகள் மற்றும் புதிய சாலைகளை அமைக்கும் சீனா- அதிர்ச்சி ரிப்போர்ட்

தற்போது இந்தியா சீனாவுக்கு இடையே தொடர்ந்து நடைபெறும் பிரச்சனைகளுக்கு மத்தியில் கிழக்கு லடாக் பகுதியில் சீனா புதிய சாலைகளை அமைக்கிறது.இது தவிர புதிய ஏவுகணை ரெஜிமென்ட் மற்றும் ராக்கெட் ரெஜிமென்டுகளை எல்லையில் நிலைநிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லடாக்கில் அக்சய் சின் பகுதியில் சீனா சாலை அமைத்து வருவதால் முன்பை விட மோதல் ஏற்பட்டால் சீனா வேகமாக எல்லைக்கு வந்துவிடும் சாதக நிலை நிலவுகிறது.

கஷ்கர் ,குன்சா மற்றும் ஹோடன் தளங்களை தவிர்த்து பல இடங்களில் சாலைகளை அகலப்படுத்தியும் புதிய வான் தளங்களை அமைத்தும் வருகிறது.

திபத் பகுதியில் பெரிய அளவில் ஏவுகணை ரெஜிமென்டுகளை சீனா நிலைநிறுத்தியுள்ளது.மேலும் அங்கு திபத்தியர்களை கொண்டு ஏதேனும் சாதிக்க முடியுமா என்பது குறித்தும் சீனா யோசித்து வருகிறது.

சென்ற ஆண்டை விட இந்த வருடம் சீனா நன்றாக தன்னை தயார் செய்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.