அருணாச்சல பிரதேச மாநிலத்தின் ஷி-யோமி மாவடத்தில் இந்திய எல்லை பகுதிக்கள் சுமார் 6 -7 கிலோமீட்டர் தூரம் ஊடுருவி சீனா ஒரு கிராமத்தை கட்டியுள்ளது.
இதனை இந்திய அரசின் ஆன்லைன் வரைபட செயலியான பாரத்மேப்ஸ் மற்றும் உலகின் முன்னனி செயற்கைகோள் புகைப்பட நிறுவனங்களான மேக்ஸார் டெக்னாலஜிஸ் , ப்ளானெட் லேப்ஸ் ஆகியவற்றின் புகைப்படங்களிலும் காண முடிகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு காட்டு பகுதியாக இருந்த இடத்தில் தற்போது 60 கட்டிடங்கள் கொண்ட கிராமத்தை சீனா கட்டமைத்து உள்ளது, மேலும் ஒரு கட்டிடத்தின் மேல் மிகப்பெரிய சீன கொடியையும் தன் உரிமையை நிலைநாட்டும் விதமாக வரைந்து வைத்துள்ளது.
இதுபற்றி பேசிய ராணுவ அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டுள்ளதாகவும், சீனாவின் சட்டவிரோத நடவடிக்கைகளை ஏற்று கொள்ள போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசும் இதற்கு தனது கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ள நிலையில் சீனாவின் அடாவடித்தனத்தை ஏற்று கொள்ள போவதில்லை என கூறியுள்ளது.