1 min read
நாசா ஆய்வு கலனுடன் மோதாமல் தப்பித்த சந்திரயான்-2 ஆய்வு கலன் !!
இந்தியா நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய சந்திரயான்-2 ஆய்வு கலன் நிலவை சுற்றி வரும்போது நாசாவின் LRO ஆய்வு கலனை மோதாமல் நகர்ந்து சென்றுள்ளது.
சந்திரயான்-2 ஆய்வு கலன் அதனுடைய 100 கிலோமீட்டர் சுற்றுவட்ட பாதையில் இருந்து நகர்ந்து ஆபத்தில் இருந்து தப்பித்ததாக இஸ்ரோ அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா தீவிரமாக விண்வெளி ஆராய்ச்சியில் இறங்கிய பிறகு இத்தகைய சம்பவம் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
தொடர்ந்து இஸ்ரோ விண்வெளியில் உள்ள தனது கலன்கள் மற்றும் செயற்கைகோள்களை கண்காணித்து வருவதனாலேயே இது சாத்தியமாகி உள்ளது என்றால் மிகையல்ல.