
இரண்டு வெவ்வேறு லஞ்ச வழக்குகளில் தொடர்புடைய 2 தரைப்படை அதிகாரிகள் மற்றும் 1 விமானப்படை அதிகாரியை மத்திய குற்றபுலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.
பூனேவில் பணியாற்றி வந்த இரண்டு தரைப்படை ஹவில்தார் அந்தஸ்திலான இடைநிலை அதிகாரிகள் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் முறைகேடு செய்ய ரூ.50,000 லஞ்சம் பெற்ற வழக்கிலும்,
இந்திய விமானப்படையில் பணியாற்றி வந்த சிவிலியன் அதிகாரி ஒருவர் இடமாறுதல் விவகாரத்தில் ரூ.50,000 லஞ்சம் பெற ஒப்பு கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு தரைப்படை இடைநிலை அதிகாரிகளின் பெயர் சுஸாந்த் நஹாக் மற்றும் நவீன் ஆகியோர் எனவும் சூர்யகாந்த் காலே எனவும் தெரிய வந்துள்ளது.