மஹாராஸ்டிராவில் சி-60 கமாண்டோ படை நடத்திய அதிரடி தாக்குதல்

  • Tamil Defense
  • November 14, 2021
  • Comments Off on மஹாராஸ்டிராவில் சி-60 கமாண்டோ படை நடத்திய அதிரடி தாக்குதல்

மஹாராஸ்டிராவில் சி-60 கமாண்டோ படை நடத்திய அதிரடி தாக்குதலில் 26 நக்சல் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

மஹாராஸ்டிராவின் கச்சிரோலி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.இந்த சண்டையில் முக்கிய நக்சல் உட்பட 26 பேர் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

இது வரை காட்டுப்பகுதியில் இருந்து 26 பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக எஸ்பி அங்கித் கோயல் கூறியுள்ளார்.ஏடிஎஸ்பி சௌம்யா முன்டே தலைமையில் சி-60 கமாண்டோக்கள் மர்டின்டோலா காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது அதிகாலை 5 மணிக்கு இந்த சண்டை தொடங்கியுள்ளது.

மேலும் இந்த சண்டையில் காயம்பட்ட வீரர்கள் வானூர்தி வழியாக மீட்கப்பட்டு நாக்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.மேலும் சில நக்சல்கள் சரணடைந்துள்ளனர்.

மேலும் சண்டை நடந்த காட்டுப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.இந்த கத்சிரோலி மாவட்டம் மஹாராஸ்டிரா-சத்திஸ்கர் மாநில எல்லையில் உள்ளது.

யார் இந்த சி-60 கமாண்டோக்கள் ?

கத்ரிசோலி மாவட்டமாக உருவான போது அங்கு நக்சல்களின் நடவடிக்கைகள் அதிகமாகியதை தொடர்ந்து அப்போதைய எஸ்பி ரகுவன்ஷி அவர்கள் டிசம்பர் 1 1990ல் 60 கமாண்டோ வீரர்களை கொண்டு சி-60 கமாண்டோ படைப் பிரிவை தோற்றுவித்தார்.

நக்சல்களுக்கு எதிராக பல்வேறு வெற்றிகரமான ஆபரேசன்களை இந்த படைப் பிரிவு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.