நக்சல்களுக்கு ஆயுதம் விற்ற BSF கான்ஸ்டபிள் கைது, மிகப்பெரிய ஆயுத வியாபார கும்பலின் தலைவன் அதிர்ச்சி தகவல்கள் !!

  • Tamil Defense
  • November 27, 2021
  • Comments Off on நக்சல்களுக்கு ஆயுதம் விற்ற BSF கான்ஸ்டபிள் கைது, மிகப்பெரிய ஆயுத வியாபார கும்பலின் தலைவன் அதிர்ச்சி தகவல்கள் !!

ஜார்கண்ட் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு நக்சல்களுக்கு ஆயுதம் மற்றும் தோட்டாக்களை விற்ற BSF வீரரை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரரின் பெயர் கார்த்திக் பெஹ்ரா எனவும் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் மற்றும் பலருக்கு ஆயுதம் விற்றது தெரிய வந்துள்ளது.

இவன் கைது செய்யப்பட்ட போது எல்லை பாதுகாப்பு படையின் 116ஆவது பட்டாலியனில் பணியாற்றி வந்துள்ளான் அதுவும் பட்டாலியனுடைய ஆயுத கிட்டங்கியின் பொறுப்பாளராக இருந்துள்ளான்.

அவனிடம் இருந்து சுமார் 8304 மேகஸின்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன, மஹாராஷ்டிரா மாநிலத்தில் இந்த வழக்கில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 14 கைதுப்பாக்கிகள் மற்றும் 21 மேகஸின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சில நாட்களுக்கு முன்னர் ஜார்கண்ட் காவல்துறை இதே போல் ஆயுதம் சப்ளை செய்த மத்திய ரிசர்வ் காவல்படையில் பணியாற்றி வந்த அவினாஷ் குமார் என்பவனை கைது செய்தனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி ஒய்வு பெற்ற அருண் குமார் சிங் பற்றிய தகவல் கிடைத்தது அவனையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது தான் கார்த்திக் பெஹ்ராவின் கும்பலில் உறுப்பினர் என்பதும் கார்த்திக் பெஹ்ரா பற்றிய உண்மைகளும் வெளியாகின இதன் அடிப்படையில் தான் காரத்திக் பெஹ்ரா கைது செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.