BSFன் முன்னனி எல்லை காவல் நிலைகளுக்கு ஸ்டீல் பாதுகாப்பு கட்டுமானம் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடனான 772 கிலோமீட்டர் நீள எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் பல காவல்சாவடிகள் உள்ளன.

இவை அனைத்தும் பதற்றம் நிறைந்த காடு மற்றும் மலை பகுதிகளில் உள்ளன. இதில் 430 கிலோமீட்டர் அளவிலான பகுதியில் ராணுவத்துடனோ அல்லது தனியாகவோ எல்லை பாதுகாப்பு படை இயங்கி வருகிறது.

இந்த காவல் சாவடிகள் CGI எனும் சிறப்பு இரும்பால் ஆனவை, இவற்றில் வசிக்கும் வீரர்கள் கடுமையான கால நிலைகளின் தாக்கத்தில் பாதிக்கப்படுவது வழக்கம்.

தற்போது எல்லை பாதுகாப்பு படை சுமார் 115 காவல்சாவடிகளை சுமார் 35 கோடி செலவில் ஸ்டீலால் ஆன கட்டுமானமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

சமீபத்தில் BSF இயக்குனர் ஜெனரல் பங்கஜ் சிங் காஷ்மீர் சென்ற பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, சூரிய ஒளி மின்தகடுகளையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.