
மத்திய தரைக்கடல் பகுதியில் இங்கிலாந்து கடற்படைக்கு சொந்தமான எஃப்35 போர் விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தின் விமானி வெளிவந்த நிலையில் விமானத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார், இதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 100 மில்லியன் பவுன்ட் மதிப்புமிக்க அடுத்த தலைமுறை விமானமான இதனை கண்டுபிடிக்க இங்கிலாந்து கடற்படை தீவிரம் காட்டி வருகிறது.
ரஷ்யர்களும் இந்த விமானத்தை தேடி வருவதாக தெரிகிறது அவர்களின் கையில் கிடைத்தால் விமானத்தின் ஸ்டெல்த் திறன்கள் பற்றிய ரகசியங்கள் வெளியாகும்.
ஆகவே இங்கிலாந்து கடற்படையின் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மற்றும் ஆளில்லா நீர்மூழ்கிகள் மூலமாக தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.