கடுமையான காயத்திலும் தொடர்ந்து வீரத்துடன் எதிர்த்த ஹவில்தார் பழனி

வீர் சக்ரா ஹவில்தார் கே பழனி அவர்கள் கொடிய காயங்கள் இருந்தபோதிலும் எதிரிகளுடன் சண்டையிடும் போது தனது இடத்தில் வீரத்துடன் நின்று போரிட்டுள்ளார்.

15 ஜூன் 2020 அன்று இரவு, ஹவில்தார் கே.பழனி 16 பீகார் படைப்பிரிவின் கூட்டு ரோந்துப் பகுதியாக கட்டுப்பாட்டுக் கோடு அருகில் ரோந்து பணியில் இருந்தார்.அப்போது அங்கு வந்த எதிரி வீரர்களால் ரோந்நு குழு தடுத்து நிறுத்தப்பட்டது.இந்த சந்திப்பு கடுமையான வாக்குவாதத்திற்கு வழிவகுத்து பின்பு இரு துருப்புக்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

பழனி எதிரிகளை வீரத்துடன் எதிர்த்துப் போரிட்டார், ஆனால் எதிரில் இருந்த வீரர்கள் விரைவில் எண்ணிக்கையில் அதிகமாகி அவரைச் சுற்றி வளைத்தனர்.இருந்தபோதிலும், அவர் தனது நிலைப்பாட்டில் நின்று தனது தோழர்களை தைரியமாக பாதுகாத்தார்.

அவர் கடுமையான காயங்களால் அவதிப்பட்டார் எனினும் தொடர்ந்து தனது நிலையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார், இறுதியில் அவரது காயங்கள் காரணமாக வீரமரணம் அடைந்தார்.அவர் தனது தாய்நாட்டிற்காக தனது உயிரைக் கொடுத்தார்.

சீனத் துருப்புக்களுடனான வன்முறை மோதலின் போது வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களில் இவரும் ஒருவர்.

அவரது துணிச்சல் மற்றும் வீரத்தை அங்கீகரிக்கும் வகையில், ஹவில்தார் கே பழனிக்கு “வீர் சக்ரா” (மரணத்திற்குப் பிந்தைய)வழங்கப்பட்டது.

கே பழனி தனது 18 வயதில், Xll வகுப்புக்குப் பிறகு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.

அவர் ஒரு விவசாயி தம்பதியருக்கு பிறந்தவர் மற்றும் நிதி காரணங்களால் உயர் கல்வியைத் தொடர முடியவில்லை, இறுதியில் தொலைதூரக் கல்வி மூலம் தனது பிஏ (வரலாறு) முடித்தார்.

பழனிக்கு அவரது மனைவி வனதேவி மற்றும் இரண்டு குழந்தைகள் – பத்து வயது மகன் பிரசன்னா மற்றும் எட்டு வயது மகள் திவ்யா உள்ளனர்.அவரது மனைவி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எழுத்தராக பணிபுரிகிறார், அவருடைய தம்பி இதயக்கனியும் இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார்.