பதான்கோட் ராணுவ கன்டொன்மென்டுக்கு வெளியே சீன தயாரிப்பு குண்டு பயன்படுத்தி தாக்குதல் !!

பஞ்சாப் மாநிலத்தில் பதான்கோட் நகரில் அமைந்துள்ள ராணுவ கண்டோன்மென்ட்டுக்கு வெளியே கையெறி குண்டு வீசப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் முகாமின் பிரதான நுழைவு வாயிலான த்ரிவேணி த்வாருக்கு முன் கையெறி குண்டு ஒன்றை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

மேலும் இது பயங்கரவாத செயலாக இருக்கும் என பஞ்சாப் மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர், இதையொட்டி பதான்கோட் மாவட்டமே உஷார் நிலையில் உள்ளது.

மேலும் வீசப்பட்ட கையெறி குண்டு சீன தயாரிப்பு பி-86 ரக குண்டு என பஞ்சாப் மாநில காவல்துறை இயக்குனர் இக்பால் ப்ரீத் சிங் தெரிவித்தார்.