பிரிட்டனிடம் இருந்து 5 போர் கப்பல்களை பெற உள்ள வங்கதேசம் !!
1 min read

பிரிட்டனிடம் இருந்து 5 போர் கப்பல்களை பெற உள்ள வங்கதேசம் !!

வங்கதேச கடற்படைக்காக அந்நாட்டு அரசு இங்கிலாந்து நாட்டிடம் இருந்து 5 அதிநவீனமான போர்க்கப்பல்களை வாங்க உள்ளது.

இவற்றில் 2 வங்கதேச நாட்டிலேயே கட்டமைக்கப்பட உள்ளதாகவும் இதற்கான தொழில்நுட்ப உதவிகளை இங்கிலாந்து செய்ய உள்ளது.

மீதமுள்ள மூன்று கப்பல்களும் இங்கிலாந்து நாட்டில் கட்டப்பட்டு வங்கதேச கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வங்கதேச வெளியுறவு அமைச்சர் அப்துல் மொமென் இதை தெரிவித்தார் அவருடன் வெளியுறவு செயலர் மசூத் மற்றும் இங்கிலாந்துக்கான தூதர் சைதா மோனா ஆகியோர் உடனிருந்தனர்.

வங்கதேச கடற்படை மேலும் கூடுதலாக 6 அதிநவீன புதிய ஃப்ரிகேட்டுகள் மற்றும் கண்ணிவெடி எதிர்ப்பு போர்முறை கலன்களை வாங்க முனைந்து வருவது குறிப்பிடத்தக்கது.