
அறிக்கைகளின்படி, வங்கதேசத்திற்குச் அளித்த சீனாவின் பயிற்சி விமானம் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளில் குறைபாடுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வங்கதேசப் படைகளுக்கு சீனாவால் சப்ளை செய்யப்பட்ட கடற்படை கப்பல்களுக்கான விநியோகத்தின் தரமும் ஆய்வுக்கு உட்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
கார்வெட்டுகள், கடற்படைத் துப்பாக்கிகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணை அமைப்புகள் உட்பட சமீப ஆண்டுகளில் சீனாவிடமிருந்து கணிசமான அளவு ராணுவ தளவாடங்களை பங்களாதேஷ் பெற்றுள்ளது.
பங்களாதேஷின் முக்கிய வர்த்தக கூட்டாளியாகவும் சீனா உள்ளது. 2016 ஆம் ஆண்டில், பங்களாதேஷ் தனது கடற்படை சக்தியை அதிகரிக்க இரு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷின் இராணுவம் சீனாவால் கட்டப்பட்ட எப்எம்-90 தரையிலிருந்து வான் ஏவுகணையையும் வாங்கியுள்ளது.தவிர பங்களாதேஷ் கே-8டபூள்யூ விமானத்தை 2014 இல் வாங்கியதாகவும், பின்னர் மற்றொரு புதிய தொகுதி விமானங்களை பெற்றது எனினும், ஏழு விமானங்களில் குறைந்தது இரண்டில் கடந்த ஆண்டு சிக்கல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.