ஒய்வு பெற்ற அமெரிக்க கடற்படையின் அணுசக்தி நீர்மூழ்கிகளை ஆஸ்திரேலியா பெற முயற்சியா ??

முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் ஆக்கஸ் ஒப்பந்தம் வாயிலாக ஆஸ்திரேலிய கடற்படைக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உதவியுடன் குறைந்தபட்சம் 8 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள் கட்டப்பட உள்ளன.

ஆனால் ஆஸ்திரேலியா இதுவரை இத்தகைய நீர்மூழ்கிகளை கட்டியதும் இல்லை அவற்றை பெற்று இயக்கியதும் இல்லை ஆகவே அனுபவமின்மை நிலவுகிறது.

இதனை போக்க நீர்மூழ்கிகள் கட்டப்படும் காலத்தில் ஒய்வு பெற்ற மற்றும் பெற உள்ள அமெரிக்க அல்லது இங்கிலாந்து அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகளை ஆஸ்திரேலியா பெற்று பயிற்சி காரணங்களுக்காக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

அந்த வகையில் அமெரிக்க கடற்படையின் லாஸ் ஏஞ்சல்ஸ் ரக நீர்மூழ்கிகளில் அடுத்த ஒய்வு பெற உள்ள ப்ராவிடென்ஸ் மற்றும் ஒக்லஹோமா சிட்டி ஆகியவையும்,

இங்கிலாந்து கடற்படையின் ஒய்வு பெற்ற நான்கு ட்ரஃபால்கர் ரக நீர்மூழ்கிகளில் ஏதேனும் ஒன்றை பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.