சீனாவின் புதிய ஏவுகணைக்கு பதிலடியாக அமெரிக்கா சோதித்து வரும் உலகின் அதிநவீன ஏவுகணை !

  • Tamil Defense
  • November 26, 2021
  • Comments Off on சீனாவின் புதிய ஏவுகணைக்கு பதிலடியாக அமெரிக்கா சோதித்து வரும் உலகின் அதிநவீன ஏவுகணை !

சீனா சமீபத்தில் தனது ஐந்தாம் தலைமுறை ஜே-20 போர் விமானத்தில் PL-15 எனும் இரட்டை பல்ஸ் ராக்கெட் மோட்டார் கொண்ட தொலைதூர வானிலக்கு ஏவுகணையை இணைத்துள்ளது.

இதற்கு பதிலடியாக அமெரிக்க விமானப்படை AIM-260 எனும் உலகின் அதிநவீனமான தொலைதூர வானிலக்கு ஏவுகணையை சோதித்து வருகிறது.

இந்த AIM-260 வானிலக்கு ஏவுகணையானது ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் AIM-120 இடைத்தூர வானிலக்கு ஏவுகணையின் அடுத்த வடிவமாகும்.

தற்போதைய நிலவரப்படி அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்த ஏவுகணையை அமெரிக்க விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏற்கனவே AIM-120D என்கிற மென்பொருள் மேம்பாடு செய்யப்பட்ட ஏவுகணையும் அமெரிக்க விமானப்படையால் பயன்படுத்தி வரப்படுவது குறிப்பிடத்தக்கது.