சீனாவை நோக்கி வலுவான இராணுவ நிலைப்பாட்டை எடுக்க திட்டமிடும் அமெரிக்கா

அமெரிக்காவின் முன்னணி பாதுகாப்பு போட்டியாளரான சீனாவின் மீது கவனம் செலுத்தும் நோக்கில், அமெரிக்க பாதுகாப்புத் துறையானது தற்போது குவாம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது இராணுவம் சார் தளங்களை ராணுவ வசதிகளை மேம்படுத்தி விரிவுபடுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அமெரிக்க இராணுவத்தின் முன்னுரிமைப் பகுதியாக இந்தோ-பசிபிக் பகுதி உள்ளது.

இந்த பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் முன்முயற்சிகளை முன்னெடுப்பதற்கும், சீனாவின் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் வட கொரியாவின் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும் பிராந்தியம் முழுவதும் உள்ள கூட்டாளிகளுடன் கூடுதல் ஒத்துழைப்பை ஏற்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது.