1 min read
ஏப்ரல் 2022ல் ரஃபேல் போர் விமானங்களின் டெலிவரி நிறைவு !!
ஃபிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரிக்கும் ரஃபேல் போர் விமானங்களை இந்தியா தனது விமானப்படைக்கு வாங்கியது அனைவரும் அறிந்ததே.
இதுவரை 30 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன, இனியும் ஆறு ரஃபேல் போர் விமானங்கள் டெலிவரி செய்யப்பட வேண்டும்.
அந்த ஆறு ரஃபேல் போர் விமானங்களும் வருகிற 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒப்பந்தம் முற்றிலும் நிறைவு பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.