இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள Ak-203 துப்பாக்கிகள்

  • Tamil Defense
  • November 24, 2021
  • Comments Off on இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள Ak-203 துப்பாக்கிகள்

இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் உள்ள அமேதியில் 7லட்சம் Ak-203 துப்பாக்கிகள் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த திட்டத்திற்கு தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.அமேதியில் இதற்கான தயாரிப்பு நிலையம் இந்தியா-இரஷ்யா இணைந்து அமைக்க உள்ளது.

சுமார் 5000 கோடிகள் செலவில் அமேதியில் 7 லட்சம் Ak-203 துப்பாக்கிகள் தயாரிக்கப்படும்.இந்த துப்பாக்கிகள் தற்போது இந்திய இராணுவத்தில் செயல்பாட்டில் உள்ள பழைய இன்சாஸ் துப்பாக்கிகளுக்கு பதிலாக வீரர்களுக்கு வழங்கப்படும்.