
கடந்த சில மாதங்கள் முன்னர் இந்தியா ஏர்பஸ் நிறுவனத்துடன் சுமார் 56 C-295 ராணுவ போக்குவரத்து விமானங்கள் வாங்குவதற்கான ஆர்டரை இறுதி செய்தது.
அதே மாதத்தில் கஸகஸ்தான் நாடும் இரண்டு ஏர்பஸ் A400M ரக இடைத்தர ராணுவ சரக்கு போக்குவரத்து விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது.
இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற AJPAE செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய ஏர்பஸ் டிஃபன்ஸ் மற்றும் ஸ்பேஸ் பிரிவின் தலைவர் மைக்கேல் ஷெல்ஹார்ன்,
இந்த வருட இறுதிக்குள்ளாக மிகழ்ச்சியான செய்திகளை எதிர்பார்க்கலாம் என இந்தியாவிடம் இருந்து மேலதிக ஆர்டர்கள் பற்றி சூசகமாக தெரிவித்தார்.