
அமெரிக்க ஆய்வு நிறுவனமான RAND Corporation சமீபத்தில் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது அதில் திடுக்கிடும் தகவல் ஒன்றை குறிப்பிட்டுள்ளது.
அதாவது கடந்த 1998 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்தி வெற்றியும் பெற்று அணு ஆயுதங்களை உருவாக்கியது.
இதன் பிறகே பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை அதிகமாக பயன்படுத்த துவங்கியதாகவும்
பாக் ஐ.எஸ்.ஐ திட்டத்தின் படி பயங்கரவாத நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீர் தாண்டி விரிவுபடுத்த பட்டதாகவும் அப்படி தான் பாராளுமன்ற தாக்குதல் மும்பை தாக்குதல் புல்வாமா போன்றவை நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் பயங்கரவாத குழுக்கள் இந்தியா அமெரிக்க ஏன் பாகிஸ்தானுக்குமே எதிராக இயங்கி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.