ரிலையன்ஸுக்கு சொந்தமான பெங்களூர் நிறுனத்தின் ட்ரோன்களை வாங்க இந்திய தரைப்படை ஒப்பந்தம் !!

பெங்களூர் நகரை சேர்ந்த அஸ்டீரியா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் “சிக்னஸ் ஏ10” எனும் ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய தரைப்படை ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆனால் எத்தனை ட்ரோன்கள் என்பது பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை, கடந்த 2016ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படை இந்நிறுனத்தின் ஏ400 ட்ரோன்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட 4 கிலோ எடை கொண்ட சிக்னஸ் ஏ10 ட்ரோனானது 90 நிமிடங்களுக்கு 15 கிலோமீட்டர் சுற்றளவில் பறக்கவும், 3000 மீட்டர் உயரத்தில் பறக்கவும் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.