
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை அன்று விரைவில் 90 சதவிகித ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்றார்.
முன்னர் சுமார் 65 முதல் 70 சதவிகிதம் வரையிலான தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 60 சதவிகித ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்கிறோம் என்றார்.
மேலும் பேசும் போது பிரதமர் மோடியின் கனவு திட்டமான ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தை வெற்றிகரமாக எட்ட பாதுகாப்பு துறை தீவிரமாக செயலாற்றி வருவதாக குறிப்பிட்டார்.