பெரும் தாமதத்திற்கு பிறகு பறந்த 7வது FOC தேஜஸ் விமானம்
1 min read

பெரும் தாமதத்திற்கு பிறகு பறந்த 7வது FOC தேஜஸ் விமானம்

7வது எப்ஓசி தேஜஸ் பல மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு தற்போது பறந்துள்ளது.

சீன கொரானா வைரஸ் காரணமாக 6-7 மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு 7வது இறுதி செயல்பாட்டு அனுமதி பெற்ற (எப்ஒசி) தேஜஸ் விமானம் தற்போது பறப்பு சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மார்ச் 2022க்குள் இலக்கு 5 தேஜஸ் விமானம் ஆக இருந்தாலும், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் குறைந்தது மூன்று எப்ஒசி தேஜாக்களை வழங்க எச்ஏஎல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 5-6 எப்ஒசி தேஜாஸ் விமானங்கள் 2022-23 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் தேஜஸ் மார்க்1ஏ சோதனை விமானம் மே அல்லது ஜீன் மாதத்தில் தனது சோதனையை துவங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல் இரண்டு தேஜாஸ் எம்கே1ஏ விமானங்கள் மார்ச் 2024 க்குள் விமானப்படைக்கு ஒப்படைக்கப்படும் என்று HAL தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.