
இந்திய கடற்படை மற்றும் ராயல் தாய் கடற்படை இடையே இந்தியா-தாய்லாந்து ஒருங்கிணைந்த ரோந்து பயிற்சியான ( இந்தோ-தாய் கார்பாட்) நவம்பர் 12 முதல் 14, 2021 வரை நடத்தப்பட்டது.
ஐஎன்எஸ் கார்முக், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஏவுகணை கார்வெட் மற்றும் தாய்லாந்து கடற்படையின் எச்டிஎம்எஸ் தயான்சோன், கம்ரோசின் கிளாஸ் நீர்மூழ்கி எதிர்ப்பு ரோந்துக் கப்பல் தவிர இரண்டு கடற்படைகளின் கடல்சார் ரோந்து விமானங்கள் இந்த கார்ப்பேட் பயிற்சியில் பங்கேற்றன.
இரு நாடுகளுக்கும் இடையே கடல்சார் இணைப்புகளை வலுப்படுத்துவதற்கும், இந்தியப் பெருங்கடலின் இந்த முக்கியப் பகுதியை பாதுகாப்பாகவும், சர்வதேச வர்த்தகத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் நோக்கத்துடன், இரு கடற்படைகளும் 2005 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கார்ப்பேட் பயிற்சியை ஆண்டுக்கு இருமுறை மேற்கொண்டு வருகின்றன.

கடத்தல், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் கடலில் பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்துதல் ஆகியவற்றைத் தடுப்பதற்கான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்த இந்த பயிற்சி உதவுகிறது.
இந்திய கடற்படையின் சாகர் திட்டத்தின் கீழ் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுடன் இந்திய கடற்படை இருதரப்பு மற்றும் பலதரப்பு பயிற்சிகள், ஒருங்கிணைந்த ரோந்துகள், கூட்டு கண்காணிப்பு மேற்கொள்கிறது.

இந்திய கடற்படை மற்றும் ராயல் தாய் கடற்படை ஆகியவை குறிப்பாக பல ஆண்டுகளாக பலப்படுத்தப்பட்ட செயல்பாடுகள் மற்றும் தொடர்புகளின் பரந்த அளவில் ஒரு நெருக்கமான மற்றும் நட்பு உறவை மேம்படுத்தியுள்ளது.32வது இந்தோ-தாய் கார்ப்பேட், இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே செயல்படும் மற்றும் வலுவான நட்புறவை உருவாக்குவதற்கான இந்திய கடற்படையின் முயற்சிகளுக்கு பங்களிக்கும்.