காஷ்மீருக்கு விரையும் மேலதிக துணை இராணுவப்படைப் பிரிவுகள்

  • Tamil Defense
  • November 9, 2021
  • Comments Off on காஷ்மீருக்கு விரையும் மேலதிக துணை இராணுவப்படைப் பிரிவுகள்

காஷ்மீரில் மீண்டும் அதிகரிக்கும் பயங்கரவாத சம்பவங்கள் காரணமாக அங்கு மேலதிக படைகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.காஷ்மீரின் தற்போதயை நிலை குறித்து உள்துறை அமைச்சர் கடந்த மாதம் மேற்கொண்ட ஆய்வை அடுத்து தற்போது படைகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 50 கம்பெனிகள் சிஆர்பிஎப் மற்றும் 25 கம்பெனிகள் எல்லைக் காவல் படைகள் மேலதிகமாக காஷ்மீருக்கு அனுப்பப்பட உள்ளன.

இந்த 30 கம்பெனிகள் படைப் பிரிவுகளும் ஸ்ரீநகரில் மட்டுமே நிலைநிறுத்தப்பட உள்ளன.கடந்த மாதம் ஸ்ரீநகரில் பொதுமக்களை பயங்கரவாதிகள் கொல்லப்படுவது அதிகரித்ததை அடுத்து இந்த முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.

இந்த படைகள் அங்குள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு அபாயம் அதிகம் உள்ள இடங்களில் பணியமர்த்தப்படும்.

தற்போது சிஆர்பிஎப் படை 10 இடங்களில் தளங்கள் அமைக்க உள்ளது.இந்த இடங்களில் சிஆர்பிஎப் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பாதுகாப்பாக தங்க வைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.