Day: November 28, 2021

இந்தியாவிடமிருந்து காலாபானி, லிம்பியாதுரா மற்றும் லிபுலேக் பகுதிகளை திரும்பப் பெறுவேன் – நேபாள முன்னாள் பிரதமர் ஒலி

November 28, 2021

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கேபி சர்மா ஒலி, தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிடமிருந்து காலாபானி, லிம்பியாதுரா மற்றும் லிபுலேக் பிரதேசங்களை மீட்பேன் என சபதம் செய்துள்ளார். லிபுலேக் என்பது நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான எல்லைப் பகுதியான கலாபானிக்கு அருகில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இமயமலைக் கணவாய் பகுதி ஆகும். இந்தியாவும் நேபாளமும் காலாபானியை தங்கள் பிராந்தியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கூறுகின்றன – இந்தியா இமயமலை உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும், நேபாளம் தார்ச்சுலா […]

Read More

ரஃபேல்கள் வந்த பிறகும் மிராஜ் விமானங்களை கொண்டாடும் விமானப்படை காரணம் என்ன ??

November 28, 2021

இந்திய விமானப்படை இதுவரை 30 ரஃபேல் போர் விமானங்களை பெற்றுள்ளது மீதமுள்ள ஆறு ரஃபேல் விமானங்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வாக்கில் டெலிவரி செய்யப்பட்டு விடும். மேலும் இவற்றின் வருகை காரணமாக இந்திய விமானப்படையின் வலு இந்த பிராந்தியத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது, ஆனாலும் விமானப்படை மிராஜ்2000 விமானங்களை கொண்டாடி வருகிறது. இதற்கு காரணம் ஒரு மிராஜ் 2000 போர் விமானத்தை உத்தரவு கிடைத்த அடுத்த ஆறே நிமிடங்களில் தயார் செய்து பறக்க வைக்க முடியும் என்பது […]

Read More

புடின் வருகையின் போது இந்தியா ரஷ்யா இடையே 10 வருட ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து !!

November 28, 2021

அடுத்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வர உள்ளார் அப்போது இந்தியா ரஷ்யா இடையே அடுத்த 10 ஆண்டுகளுக்கான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அடிப்படையில் இது ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகும், 2031ஆம் ஆண்டு வரை புதிய அதிநவீன எதிர்கால ராணுவ தொழில்நுட்பங்களை பரிமாறி கொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். குறிப்பாக நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆராய்ச்சிகளுக்கு மிகப்பெரிய […]

Read More

இந்திய ரஷ்ய கடற்படைகள் இடையே கையெழுத்தாக உள்ள ஒத்துழைப்பு ஒப்பந்தம் !!

November 28, 2021

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 6ஆம் தேதி அன்று இந்தியா வர உள்ளதாக இருநாட்டு அரசுகளும் உறுதி செய்துள்ளன. இந்த சுற்றுபயணத்தின் போது இந்தியா ரஷ்யா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக நம்பதகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்திய மற்றும் ரஷ்ய கடற்படைகள் இடையே கூட்டு ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகலாம் என கூறப்படுகிறது. இது தவிர ரெலோஸ் எனப்படும் மற்றொரு ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது […]

Read More

உலகிலேயே முதன்முறையாக இஸ்ரோவின் தன்னை தானே சாப்பிடும் ராக்கெட் மற்றும் காணாமல் போகும் செயற்கைகோள்கள் எதிர்கால தொழில்நுட்பம் !!

November 28, 2021

இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களின் சிந்தனையினால் உருவான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகம் (DTDI) இஸ்ரோவின் பல்வேறு எதிர்கால தொழில்நுட்ப திட்டங்களை செயலாற்றி வருகிறது. அதன்படி சமீபத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் அளித்த பேட்டியில் பூமியில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் கடலில் விழுந்தோ அல்லது விண்ணில் தங்கியோ விடுகின்றன காலாவதியான செயற்கைகோள்களும் இதே நிலையை சந்திக்கின்றன. இதன் காரணமாக பூமி குறிப்பாக கடல் மற்றும் விண்வெளி ஆகியவை கடுமையாக மாசடைகின்றன ஆகவே இதனை தடுக்க இஸ்ரோ […]

Read More

தியேட்டர் கமாண்ட் நடவடிக்கைகளை ஆய்வு செய்த இராணுவ தளபதி

November 28, 2021

“தியேட்டர் கமாண்ட் கான்செப்ட்டை” சரிபார்க்க பல படையில் உள்ள 30,000 துருப்புக்களை உள்ளடக்கிய ஒரு பெரிய இராணுவ பயிற்சியை வெள்ளிக்கிழமை இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே ஆய்வு செய்தார். இது “எதிரிகளின் எல்லைக்குள் துருப்புக்களை களமிறக்கி தாக்குவதை” பிரதிபலிக்கும் வகையில் கணிசமான எண்ணிக்கையிலான துருப்புக்கள், வாகனங்கள், பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் கவச வாகனங்களை விமானத்தில் இருந்து தரையிறக்கி பயிற்சி நடத்தப்பட்டது. ராஜஸ்தானின் பாலைவனப் பகுதி, குஜராத்தில் உள்ள ரான் ஆஃப் கட்ச் மற்றும் அரேபிய கடலில் இந்தியா-பாகிஸ்தான் […]

Read More

சத்தீஸ்கர் சுக்மாவில் நடந்த என்கவுண்டரில் நக்சல் கமாண்டர் வீழ்த்தப்பட்டான்

November 28, 2021

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது குறைந்தது ஒன்பது கொடிய தாக்குதல்களில் ஈடுபட்ட நக்சல் இயக்க கமாண்டர் வெள்ளிக்கிழமை மாலை என்கவுன்டரில் வீழ்த்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட நக்சல் பஸ்தா பீமா தலைக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு தொகையை அறிவித்திருந்தனர்.மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) காவல்துறை மற்றும் சிஆர்பிஎப்பின் எலைட் கோப்ராவின் 201 பட்டாலியன் ஆகியவற்றின் கூட்டுக் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது டாட்மெட்லா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் இரவு 7 மணியளவில் […]

Read More