Breaking News

Day: November 27, 2021

பாகிஸ்தானுக்கு சீன ஆயுத ஏற்றுமதி பிராந்திய பாதுகாப்பு சமநிலைக்கு பாதிப்பு இந்திய கடற்படை தளபதி !!

November 27, 2021

இந்திய கடற்படையில் சமீபத்தில் ஐ.என்.எஸ். வேலா எனும் நான்காவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல் மும்பையில் நடைபெற்ற விழாவில் இணைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கலந்து கொண்டார் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது, சீனா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருவது இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு சமநிலையை பாதிக்கும் எனவும், போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் என பெரிய தளவாடங்களையும் சீனா பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்கிறது இந்தியா […]

Read More

2022ல் மேலதிக அஸ்திரா ஏவுகணைகளை பெற உள்ள இந்திய விமானப்படை மற்றும் கடற்படை !!

November 27, 2021

கடந்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் இந்திய விமானப்படையின் சுகோய்30 எம்.கே.ஐ மற்றும் இந்திய கடற்படையின் மிக்29கே ஆகிய போர் விமானங்களுக்காக சுமார் 250 அஸ்திரா ஏவுகணைகளுக்கான ஒப்பந்தம் செய்து கொண்டது. முதல் தொகுதி அஸ்திரா மார்க் 1 பார்வைக்கு அப்பால் உள்ள வானிலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் 2022-2023 வாக்கில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் டெலிவரி செய்யப்படும் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்திய விமானப்படைக்கு 2019ஆம் ஆண்டு 50 Pre Induction ரக அஸ்திரா ஏவுகணைகள் […]

Read More

2022ல் இந்தியாவுக்கான் Ka226T ரக ஹெலிகாப்டர்களின் தரச்சோதனை நிறைவடையும் ரஷ்யா !!

November 27, 2021

இந்தியா தனது சேட்டக் மற்றும் சீட்டா ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக ரஷ்யாவிடம் இருந்து Ka226T ரக ஹெலிகாப்டர்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான தரச்சோதனைகள் வருகிற 2022ஆம் ஆண்டில் நிறைவடையும் என காமோவ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்ட்ரே போகின்ஸ்கி கூறியுள்ளார். ஏற்கனவே ரஷ்யா மற்றும் சிரியாவின் விமானப்படைகளில் பயன்பாட்டில் இருக்கும் Ka226 ரக ஹெலிகாப்டரின் முற்றிலும் மேம்பட்ட புதிய இந்தியாவுக்கான பிரத்யேக வடிவம் தான் இந்த Ka226T என்பது குறிப்பிடத்தக்கது. இந்த Ka226T ரக ஹெலிகாப்டர்கள் […]

Read More

பாராளுமன்ற நிலைக்குழு முன் கூட்டுபடைகள் தலைமை தளபதி, முப்படை தளபதிகள் ஆஜர்; 31 உறுப்பினர்களில் 11 எம்.பிக்கள் மட்டுமே பங்கேற்பு நாட்டின் பாதுகாப்பில் அரசியல்வாதிகளின் அக்கறை !!

November 27, 2021

பாதுகாப்பு துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு முன்பு கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், முப்படைகளின் தலைமை தளபதிகள் மற்றும் இதர மூத்த தளபதிகள் ஆகியோர் ஆஜராகினர். இந்த நிகழ்வின் போது பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு முப்படை அதிகாரிகள் தகுந்த விளக்கமளித்தனர். எல்லையோர உள்கட்டமைப்பு தேச பாதுகாப்பு படைகளின் தயார்நிலை என பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த நிகழ்வில் விவாதிக்கப்பட்டது. கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் பல்வேறு சீர்த்தருத்தங்கள் தளவாட […]

Read More

கடுமையான காயத்திலும் தொடர்ந்து வீரத்துடன் எதிர்த்த ஹவில்தார் பழனி

November 27, 2021

வீர் சக்ரா ஹவில்தார் கே பழனி அவர்கள் கொடிய காயங்கள் இருந்தபோதிலும் எதிரிகளுடன் சண்டையிடும் போது தனது இடத்தில் வீரத்துடன் நின்று போரிட்டுள்ளார். 15 ஜூன் 2020 அன்று இரவு, ஹவில்தார் கே.பழனி 16 பீகார் படைப்பிரிவின் கூட்டு ரோந்துப் பகுதியாக கட்டுப்பாட்டுக் கோடு அருகில் ரோந்து பணியில் இருந்தார்.அப்போது அங்கு வந்த எதிரி வீரர்களால் ரோந்நு குழு தடுத்து நிறுத்தப்பட்டது.இந்த சந்திப்பு கடுமையான வாக்குவாதத்திற்கு வழிவகுத்து பின்பு இரு துருப்புக்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. பழனி எதிரிகளை வீரத்துடன் […]

Read More

தரமற்ற சீன இராணுவ உபகரணங்களால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வங்காளதேசம்

November 27, 2021

அறிக்கைகளின்படி, வங்கதேசத்திற்குச் அளித்த சீனாவின் பயிற்சி விமானம் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளில் குறைபாடுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வங்கதேசப் படைகளுக்கு சீனாவால் சப்ளை செய்யப்பட்ட கடற்படை கப்பல்களுக்கான விநியோகத்தின் தரமும் ஆய்வுக்கு உட்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. கார்வெட்டுகள், கடற்படைத் துப்பாக்கிகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணை அமைப்புகள் உட்பட சமீப ஆண்டுகளில் சீனாவிடமிருந்து கணிசமான அளவு ராணுவ தளவாடங்களை பங்களாதேஷ் பெற்றுள்ளது. பங்களாதேஷின் முக்கிய வர்த்தக கூட்டாளியாகவும் சீனா உள்ளது. 2016 ஆம் ஆண்டில், பங்களாதேஷ் […]

Read More

ஷாஹீன் 1-ஏ அணுஆயுத ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான்

November 27, 2021

ஷாஹீன்-1ஏ என்ற தரை-தரை ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வியாழக்கிழமை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. “ஆயுத அமைப்பின் சில வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களை மீண்டும் சரிபார்க்கும் நோக்கில் சோதனை நடத்தப்பட்டது” என்று பாக் இராணுவம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஏவுகணையின் எந்த தொழில்நுட்ப விவரங்களையும் ராணுவம் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த சோதனை strategic forces command படையின் முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்டுள்ளது. விமான சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த கமாண்டின் தலைமை அதிகாரி; […]

Read More

ஏர்பஸ் நிறுவனத்தின் ராணுவ விமானத்திற்கு அதிநவீன இந்திய தயாரிப்பு ரேடார்கள் !!

November 27, 2021

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த இரண்டு அதிநவீன ரேடார்களை இந்திய விமானப்படைக்கான 56 ஏர்பஸ் சி295 சரக்கு விமானங்களில் பொருத்த உள்ளனர். Radar Warning Receiver (RWR) மற்றும் Missile Approach Warning Systems (MAWS) ஆகியவை தான் அந்த இரண்டு வகையான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரேடார்கள் ஆகும். இந்த திட்டம் தான் தனியார் துறையில் மேற்கொள்ளப்படும் முதலாவது மேக இன் இந்தியா ஏரோஸ்பேஸ் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்பஸ் நிறுவனம் மேற்குறிப்பிட்ட […]

Read More

நக்சல்களுக்கு ஆயுதம் விற்ற BSF கான்ஸ்டபிள் கைது, மிகப்பெரிய ஆயுத வியாபார கும்பலின் தலைவன் அதிர்ச்சி தகவல்கள் !!

November 27, 2021

ஜார்கண்ட் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு நக்சல்களுக்கு ஆயுதம் மற்றும் தோட்டாக்களை விற்ற BSF வீரரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரரின் பெயர் கார்த்திக் பெஹ்ரா எனவும் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் மற்றும் பலருக்கு ஆயுதம் விற்றது தெரிய வந்துள்ளது. இவன் கைது செய்யப்பட்ட போது எல்லை பாதுகாப்பு படையின் 116ஆவது பட்டாலியனில் பணியாற்றி வந்துள்ளான் அதுவும் பட்டாலியனுடைய ஆயுத கிட்டங்கியின் பொறுப்பாளராக இருந்துள்ளான். அவனிடம் இருந்து சுமார் 8304 மேகஸின்கள் […]

Read More