25 விமானப்படை தளங்கள் போருக்கு தயார்; விமானப்படை சீனாவை சந்திக்க தயார் !!

  • Tamil Defense
  • November 21, 2021
  • Comments Off on 25 விமானப்படை தளங்கள் போருக்கு தயார்; விமானப்படை சீனாவை சந்திக்க தயார் !!

இந்திய விமானப்படை சீன விமானப்படையை விட சிறப்பான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன விமானப்படையின் முதல் கவனம் தென் சீன கடல் பகுதி மற்றும் மேற்கு பசிஃபிக் கடல் பகுதியை ஒட்டியே உள்ளது.

அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா தைவான் மற்றும் பல நாடுகள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சீனாவுக்கு எதிரான நிலைபாட்டுடன் உள்ளன ஆகவே இந்திய எல்லையோரம் சீனாவின் கவனம் குறைவாகவே இருக்கும்.

மேலும் இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்கள் சீனாவின் ஜே10,ஜே11 மற்றும் சு27 ஆகியவற்றை விடவும் அதிநவீனமானவை ஆகும்.

ரஃபேல் விமானங்களின் மின்னனு போரியல் அமைப்பானது இந்த பிராந்தியத்திலேயே மிகவும் நவீனமானது மற்றும் சக்திவாய்ந்தது என கூறப்படுகிறது.

இந்திய சு30, மிராஜ்2000, மிக்29 ஆகிய போர் விமானங்கள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன, இவற்றில் மிராஜ்2000 மற்றும் சு30 ஆகியவை ஊடுருவி தாக்குதல் நடத்த ஏற்றவை ஆகும்.

மேலும் இந்திய தயாரிப்பிலான இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஆகியவை சீனாவுக்கு பலத்த நெருக்கடியை ஏற்படுத்தும் திறன் கொண்டவை ஆகும்.

11 சி-17 க்ளோப்மாஸ்டர், 17 ஐ.எல்-76, 11 சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ்,100 ஏ.என்-32 போன்ற சரக்கு விமானங்கள் மற்றும் 240 மி-17, 15 சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் மூலமாக படை மற்றும் தளவாட நகர்வுகளை எளிதாக செய்ய முடியும்.

இவை தவிர மூன்று ஏவாக்ஸ் விமானங்கள், ஆறு எரிபொருள் டேங்கர் விமானங்கள் ஆகியவை இந்திய விமானப்படையின் வசம் உள்ளன, இவற்றை 25 விமானதளங்ககளில் இருந்து இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன விமானப்படையின் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் எண்ணிக்கை வலுவாக இருந்தாலும் அதன் திறன்களை மற்றும் கவனம் இந்திய எல்லையை விட வேறு பகுதிகளில் அதிகமாக தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.