Day: November 25, 2021

ஃபிரான்ஸில் இருந்து இந்தியா விமானப்படையில் இணைய வந்த 2 மிராஜ் போர் விமானங்கள் !!

November 25, 2021

இன்று குவாலியர் விமானப்படை தளத்திற்கு இரண்டு ஃபிரெஞ்சு மிராஜ்2000 போர் விமானங்கள் வந்தடைந்தன. அவை பயிற்சி விமானங்கள் எனவும் அவற்றை இந்திய விமானப்படையின் மிராஜ்2000 போர் விமானங்களுக்கு இணையாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்திய விமானப்படை ஏற்கனவே தன்னிடம் இருந்த 51 மிராஜ் 2000 போர் விமானங்களை தரம் உயர்த்த பல்வேறு தொழில்நுட்பங்களை வாங்கியது ஆனால் சில விமானங்கள் விபத்தில் சிக்கிய நிலையில், பயன்படுத்தப்படாத கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் இந்த விமானங்களில் பயன்படுத்தி அவற்றை தரம் […]

Read More

ஆம்கா போர் விமானத்திற்கான என்ஜின் தேர்வு சஃப்ரானா அல்லது ரோல்ஸ் ராய்ஸா ??

November 25, 2021

விரைவில் ஐந்தாம் தலைமுறை ஆம்கா விமானத்திற்கான சோதனை வடிவத்தை உருவாக்கும் பணிக்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளிக்க உள்ளது. இதற்காக மத்திய அரசு சுமார் 15,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய உள்ளது, மேலும் இந்த சோதனை விமானத்தை வைத்து புதிய சக்திவாய்ந்த என்ஜினையும் சோதிக்க உள்ளனர். வருகிற 2022ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற உள்ள பாதுகாப்பு கண்காட்சியில் இந்த என்ஜினை தயாரிப்பதற்கான கூட்டாளியை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஃபிரான்ஸ் […]

Read More

ராணுவத்தில் சேர விரும்புகிறேன்’: கல்வான் ஹீரோ ஹவில்தார் பழனியின் மகன்

November 25, 2021

கல்வான் ஹீரோ ஹவில்தார் கே. பழனி சீனர்களுடனான மோதலின் போது உயர்ந்த தியாகத்திற்காக வீர் சக்ராவைப் பெற்றார்.இந்த விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.தற்போது அவரது மகன் தான் எதிர்காலத்தில் இந்திய இராணுவத்தில் சேர விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். குடியரசு தலைவரிடம் இருந்து வீர் சக்ரா விருதை பெற்ற பிறகு பேசிய அவரது மகன் என் தந்தையை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் மற்றும் இராணுவத்தில் நான் இணைவேன் என பேசியுள்ளார். ஹவில்தார் பழனி தவிர கல்வானில் போரில் […]

Read More

எல்லாம் தீர்க்கப்படும் வரை சீனாவுடன் இந்தியா ‘சாதாரண’ உறவை வைத்திருக்க முடியாது: வெளியுறவு செயலாளர் ஹெச்வி ஷ்ரிங்லா

November 25, 2021

இந்தியாவும் சீனாவும் இப்போது 19 மாதங்களாக எல்லைப் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளன, நவம்பர் 18 அன்று 23வது கூட்டத்தில் கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) எஞ்சியுள்ள சர்ச்சைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். எல்லாவற்றையும் தீர்க்கும் வரை சீனாவுடன் இந்தியா சாதாரண உறவை வைத்திருக்க முடியாது என்று வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று கூறினார். சீனாவுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் சில நிலுவையில் […]

Read More

நான்காவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி இன்று கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது !!

November 25, 2021

நான்காவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்.வேலா இன்று இந்திய கடற்படையிடம் மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒப்படைக்கப்பட உள்ளது. ஐ.என்.எஸ் வேலா நீர்மூழ்கி கப்பலை படையில் இணைப்பதன் மூலமாக இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் வலு அதிகரிக்கும். ஐ.என்.எஸ். வேலாவின் கட்டளை அதிகாரியான கேப்டன். அனீஷ் மேத்யூ பேசுகையில் இந்த அதிநவீன நீர்மூழ்கி கப்பலை படையில் இணைப்பது எங்களுக்கு பெருமையான தருணம் என்றார். மொத்தமாக 6 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்களில் நான்கு படையில் இணைந்த நிலையில் […]

Read More

இந்திய எல்லையோரம் அதிக உயர ஆயுதங்களை சோதனை செய்த சீனா !!

November 25, 2021

சீனா சமீபத்தில் இந்திய எல்லையோரம் இமய மலைப்பகுதியில் மேற்கொண்ட போர் ஒத்திகைகளை பற்றி ஞாயிற்றுக்கிழமை அன்று சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. CCTV தொலைக்காட்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட காணொளியில் மேற்கு தியேட்டர் கட்டளையகத்தின் ஒரு பிரிவான ஸின்ஜியாங் ராணுவ மாவட்டத்தால் நடத்தப்பட்ட போர் பயிற்சியில் சுமார் 17,000 அடி உயரத்தில் காரகோரம் மலைத்தொடரின் மீது துல்லிய தாக்குதல் போர் பயிற்சிகளை சீன ராணுவம் மேற்கொண்ட காட்சிகள் உள்ளன. ஸ்னைப்பர் துப்பாக்கிகள், மோர்ட்டார்கள், கிரனேடு லாஞ்சர்கள், டாங்கி […]

Read More

இந்திய விமானப்படைக்கு 2ஆயிரம் கோடி ருபாயில் தொலை தொடர்பு கருவிகள் வாங்க அனுமதி !!

November 25, 2021

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய் கிழமை அன்று இந்திய விமானப்படைக்கு GSAT-7C செயற்கைகோள் மற்றும் இதர கருவிகளை ரூ.2236 கோடியில் வாங்க அனுமதி வழங்கி உள்ளது. இந்த நடவடிக்கையின் மூலமாக இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு நெட்வொர்க் பன்மடங்கு வலுவாகும் என இந்திய விமானப்படையின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலால் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வரும் இந்த நடவடிக்கையால் […]

Read More

சீன ஆளில்லா விமானங்களின் விபத்து பட்டியல் !!

November 25, 2021

விபத்துக்குள்ளான ஆளில்லா விமான ரகங்கள்; 1) CH-4B =202) Wing Loong 1 = 53) Wing Loong 2 = 74) Sky-090 = 35) UV10CAM = 26) Chilong CL-4 = 27) Chilong CL-11 = 28) DB-2 = 29) Sky-02A = 110) CH-3A = 111) CH-92A = 112) Harbin BZK-005 =113) Aisheng ASN-209 = 114) Sea Cavalry SD-60 =1 இவற்றை […]

Read More

கொரோனா காலத்திற்கு பிறகு ராணுவம் மேற்கு எல்லையோரம் நடத்திய மிகப்பெரிய ஒருங்கிணைந்த போர் பயிற்சி !!

November 25, 2021

ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் எல்லையோர பகுதிகளில் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சி நடைபெற்று வருகிறது. தரைப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, எல்லை பாதுகாப்பு படை, உளவு அமைப்புகள் ஆகியவற்றை சேர்ந்த 30,000 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மிகப்பெரிய போர் பயிற்சி காரணமாக ஒட்டுமொத்த தார் பாலைவனம், ரான் மற்றும் க்ரீக் செக்டார்கள் முழுவதுமாக ராணுவ நடமாட்டம் அதிகமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பயிற்சியின் போது பல்வேறு […]

Read More

குஜராத்தில் நடைபெற்ற மிகப்பெரிய சாகர் ஷக்தி பாதுகாப்பு பயிற்சி !!

November 25, 2021

குஜராத் மாநிலத்தில் உள்ள சர் க்ரீக் பகுதி பாகிஸ்தானுடைய சிந்து மாகாணத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது, சிந்து நதி கடலில் கலக்கும் இடத்தை ஒட்டி 96 கிமீ அளவுக்கு அமைந்துள்ள ஆள் நடமாட்டம் இல்லாத சதுப்பு நில பகுதியாகும் இந்த பாதுகாப்பு பயிற்சியில் யில் இந்திய கடற்படை தரைப்படை விமானப்படை, கடலோர காவல்படை, எல்லை பாதுகாப்பு படை, குஜராத் காவல்துறை மற்றும் மாநில கடலோர காவல்துறை ஆகியவை கலந்து கொண்டன. நவம்பர் 19 முதல் 22ஆம் தேதி […]

Read More