Day: November 21, 2021

புதிய மாற்றம் உத்தராகண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் ஆகியவற்றின் எல்லை கட்டுபாடு மாற்றம் !!

November 21, 2021

இந்திய தரைப்படை தற்போது நவீனமயமாக்கல் திட்டத்தை அனைத்து மட்டத்திலும் செயல்படுத்தி வருகிறது, அந்த வகையில் தியேட்டர் கட்டளையக முறைக்கு படிப்படியாக மாறி வருகிறது. தற்போது உத்தராகண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முழுவதும் லக்னோவை தளமாக கொண்ட மத்திய ராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சீன எல்லைக்கு பொறுப்பான நான்கு கட்டளையகங்களை குறைத்து மூன்று கட்டளையகங்களை மட்டுமே வைத்திருக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் எதிர்காலத்தில் ஹிமாச்சல் பிரதேசம் முதல் அருணாச்சல பிரதேசம் […]

Read More

ஜார்கண்டில் மாவோயிஸ்டுகள் அட்டுழியம் ரயில் பாதை குண்டுவைத்து தகர்ப்பு !!

November 21, 2021

ஜார்கண்ட் மாநிலத்தின் லதேஹார் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலையில் மாவோயிஸ்டுகள் ரயில் பாதை ஒன்றை குண்டுவைத்து தகர்த்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு ரிச்சுகுட்டா மற்றும் டெமு ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற்றுள்ளது என பலாமூ ரேஞ்ச் கொண்டு காவல்துறை ஐஜி தெரிவித்துள்ளார். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக பர்காகானா மற்றும் கர்வாஹ் இடையிலான ரயில்சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மணிப்பூர் தாக்குதல் எதிரொலி ராணுவத்தின் படைக்குறைப்பு நடவடிக்கை நிறுத்தமா

November 21, 2021

சமீபத்தில் மணிப்பூர் மாநிலத்தில் 46ஆவது அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் பட்டாலியனுடைய கட்டளை அதிகாரி அவரது மனைவி மகன் மற்றும் மூன்று வீரர்கள் பயங்கரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டனர். மேலும் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் அதிகரித்துள்ள பயங்கரவாத செயல்கள் ராணுவத்தின் பார்வைக்கு வந்துள்ளன. இதுதவிர அஸ்ஸாம், மணிப்பூர், நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உல்ஃபா, PLA, PREPAK, NSCN-K (YA), KYKL, UNLF போன்ற அமைப்புகள் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. ஆகவே தற்போது இந்திய […]

Read More

2022ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் எஸ்400 எல்லையில் நிறுத்தம் !!

November 21, 2021

வருகிற 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இரண்டு எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகள் எல்லையோரம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவில் இருந்து வெளியாகும் தகவல்களின்படி எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகளின் டெலிவிரி துவங்கி உள்ளதாகவும் அடுத்த மாதம் அவற்றிற்கான ரேடார்கள் இந்தியா வர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா மொத்தமாக ஐந்து எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது இவை வரும் பட்சத்தில் இந்திய வான் பாதுகாப்பு பன்மடங்கு வலுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

25 விமானப்படை தளங்கள் போருக்கு தயார்; விமானப்படை சீனாவை சந்திக்க தயார் !!

November 21, 2021

இந்திய விமானப்படை சீன விமானப்படையை விட சிறப்பான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன விமானப்படையின் முதல் கவனம் தென் சீன கடல் பகுதி மற்றும் மேற்கு பசிஃபிக் கடல் பகுதியை ஒட்டியே உள்ளது. அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா தைவான் மற்றும் பல நாடுகள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சீனாவுக்கு எதிரான நிலைபாட்டுடன் உள்ளன ஆகவே இந்திய எல்லையோரம் சீனாவின் கவனம் குறைவாகவே இருக்கும். மேலும் இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்கள் சீனாவின் ஜே10,ஜே11 மற்றும் சு27 ஆகியவற்றை […]

Read More

விரைவில் 90% ஆயுதங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு !!

November 21, 2021

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை அன்று விரைவில் 90 சதவிகித ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்றார். முன்னர் சுமார் 65 முதல் 70 சதவிகிதம் வரையிலான தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 60 சதவிகித ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்கிறோம் என்றார். மேலும் பேசும் போது பிரதமர் மோடியின் கனவு திட்டமான ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தை வெற்றிகரமாக எட்ட பாதுகாப்பு துறை தீவிரமாக செயலாற்றி வருவதாக குறிப்பிட்டார்.

Read More

‘நாங்கள் திருப்பி அடிப்போம்’ இந்தியாவில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகள் குறித்து பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை:

November 21, 2021

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பித்தோராகரில் உள்ள முனாகோட்டில் ‘சைனிக் சம்மான் யாத்ரா’ தொடக்க விழாவில் பேசுகையில், இந்திய ராணுவத்தின் துணிச்சலான முயற்சிகள் மற்றும் ஆர்வத்தை பாராட்டிய சிங், ‘இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க’ அதிகபட்ச முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபடுவதாக கூறினார்.சீனாவுடனான எல்லை மோதலை சுட்டிக்காட்டிய அவர், பதிலடி கொடுப்பதற்கான நாட்டின் திறமையையும் உறுதிப்படுத்தினார். “இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் அனைத்து முயற்சிகளையும் செய்கிறது, ஆனால் நாங்கள் பதிலடி கொடுப்போம் என்று அவர்களுக்கு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளோம்.”இது ஒரு […]

Read More

150 இலகுரக போர் ஹெலிகாப்டர்களை தயாரிக்க தயார்: HAL தலைவர்

November 21, 2021

பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் இலகுரக போர் ஹெலிகாப்டரை (எல்சிஎச்) இந்திய விமானப்படைக்கு (ஐஏஎஃப்) ஒப்படைத்துள்ள நிலையில், அரசுக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) தேவைப்பட்டால், ஆயுதப்படைகளுக்கு 150 யூனிட்களை வழங்க தயாராக உள்ளதாக கூறியுள்ளது. ஹெச்ஏஎல் தலைவர் ஆர் மாதவன் இந்தியா டுடேயிடம் கூறுகையில், ஹால் மொத்தம் 150 எல்சிஎச் ஆர்டரை எதிர்பார்த்து வருவதாகவும், ஏற்கனவே ஐஏஎஃப் ஆர்டர் செய்த 15 ஐ ஒரு வருடத்திற்குள் வழங்க முடியும் […]

Read More