Day: November 18, 2021

அருணாச்சலில் மி-17 வானூர்தி விபத்து

November 18, 2021

அருணாச்சல பிரதேசத்தில் எம்ஐ-17 ஹெலிகாப்டர் வலுக்கட்டாயமாக தரையிறங்கியதால் ஐஏஎப் வீரர்கள் காயமடைந்துள்ளனர். வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் வியாழக்கிழமை தரையிறங்கியது. எம்ஐ17 ஐஏஎப் ஹெலிகாப்டர் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்ட பிறகு கட்டாயமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்த ஐந்து ஐஏஎப் வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஆனால் இந்த சம்பவத்தில் அவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ஐந்து பேரில் இரண்டு விமானிகள் மற்றும் மூன்று வீரர்கள் அடங்குவர். இந்த சம்பவத்திற்கான காரணங்களை அறிய […]

Read More

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஆயுதம் தாங்கிய QUADCOPTER துபாயில் அறிமுகம் !!

November 18, 2021

துபாய் கண்காட்சியில் புதிய ஆயுதம் தாங்கிய QUADCOPTER அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, 1.5 கிலோகிராம் சுமை தூக்கும் திறன் கொண்ட இது 32 நிமிடம் பறக்கும் ஆற்றல் கொண்டது சுமையின்றி 45 நிமிடம் பறக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் 1.5 கிலோ வெடிகுண்டும் , 1 கிலோகிராம் எடையிலான துல்லிய தாக்குதல் ஏவுகணையும் சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

லடாக் பிரச்சினைக்கு இடையே இந்திய விமானப்படையின் மிகப்பெரிய கனரக போக்குவரத்து பயிற்சி !!

November 18, 2021

திங்கட்கிழமை அன்று இந்திய விமானப்படை மற்றும் இந்திய தரைப்படை ஆகியவை இணைந்து ஆபரேஷன் ஹெர்குலிஸ் என்ற பெயரில் மிகப்பெரிய கனரக போக்குவரத்து பயிற்சியை மேற்கொண்டன. இந்த பயிற்சியில் மேற்கு கட்டளையக விமானப்படையின் முன்னனி விமான தளங்களில் இருந்து புறப்பட்ட சி17 க்ளோப்மாஸ்டர், சி130 சூப்பர் ஹெர்குலிஸ் மற்றும் ஏ.என்32 ஆகிய விமானங்கள் கலந்து கொண்டன. இந்த பயிற்சியின் நோக்கம் குறைந்த கால கட்டத்தில் மிக விரைவாக எல்லைக்கு துருப்புகள் தளவாடங்கள் ஆயுதங்கள் மருந்து பொருட்கள் உணவு ஆகியவற்றை […]

Read More

ஆஃப்கனுக்கான அமெரிக்க தூதர் அஜித் தோவலுடன் சந்திப்பு !!

November 18, 2021

ஆப்கனுக்கான அமெரிக்க தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட தாமஸ் வெஸ்ட் இந்திய சுற்றுபயணமாக வந்துள்ளார். தலைநகர் தில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது ஆஃப்கானிஸ்தான் நிலவரம் குறித்தும், சமீபத்தில் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற “ஆஃப்கன் குறித்த பிராந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசர்களின் கூட்டம்” குறித்தும் விவாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆஃப்கனுக்கு உலகளாவிய ரீதியில் மனிதாபிமான அடிப்படையில் உதவுவது மற்றும் இருதரப்பு உறவுகள் […]

Read More

எஸ்-400 வாங்குவதால் அமெரிக்க அரசு இந்தியா மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது அமெரிக்க செனட்டர்; அதிகரிக்கும் ஆதரவு குரல் !!

November 18, 2021

இந்தியா உடனான அமெரிக்க உறவுகள் பலமாகி வரும் நேரத்தில் எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது என செனட்டர் ஒருவர் கூறியுள்ளார். ரிபப்ளிக்கன் கட்சியை சேர்ந்த செனட்டர் டாம்மி டியபர்வில் சமீபத்தில் இந்தியா சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினோம் சீன விவகாரம் குறித்து விவாதித்தோம், இந்தியா ஒரு ஏஜீஸ் அல்லது பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கியிருந்தால் மிக்க மிகழ்ச்சி தான், ஆனாலும் அவர்களின் தற்போதைய முடிவு […]

Read More

மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் அனுமதி !!

November 18, 2021

இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக இந்திய கடற்படை அதிகாரியான கமாண்டர் குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது. ஒய்வு பெற்ற கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவை ஈரானிலிருந்து சட்ட விரோதமாக கடத்தியதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க பாகிஸ்தான் பாராளுமன்றம் குல்பூஷன் ஜாதவுக்கு மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கும் சட்டத்தை […]

Read More

மலேசிய தேஜாஸ் விமானத்திற்கான விலையை அறிவித்த இந்தியா, ஸ்வீடன் விமானத்தை விடவும் குறைவு !!

November 18, 2021

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மலேசியாவுக்கான தேஜாஸ் போர் விமானத்தின் விலையை அறிவித்துள்ளது. ஒரு ஏசா ரேடார் பொருத்தப்பட்ட தேஜாஸ் விமானத்தின் விலை 41 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் .இது இந்திய மதிப்பில் 304 கோடி ரூபாய் குறைவாகும். இது இந்திய விமானப்படையின் தேஜாஸ் விமானங்களை விடவும் 5 கோடி குறைவாகும் மேலும் போட்டியில் உள்ள மற்றொரு விலை குறைவான ஸ்வீடனின் க்ரைப்பன் விமானத்தை விடவும் 19 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைவாகும். இவை அனைத்தும் […]

Read More

ஆஃப்கனில் வேகமாக பரவும் ஐ.எஸ் இயக்கம் கட்டுபடுத்த திணறும் தாலிபான்கள், ஐநா தூதர் எச்சரிக்கை !!

November 18, 2021

ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிகாரத்தை கைபற்றியதுமே ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமும் எவ்வித தடையுமின்றி இயங்க தொடங்கியது. காபூல் விமான நிலையத்தின் மீட்பு பணிகளின் போதே ஈவு இரக்கமற்ற முறையில் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்தது. தற்போது ஆஃப்கனுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் டெபோரா லியோன் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் மிக மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் காபூலை தவிர அனைத்து மாகாணங்களிலும் பரவி உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தாலிபான்களால் ஐ.எஸ் […]

Read More

கார்டியன் ட்ரோன்களின் விலையில் இந்தியாவுக்கு ஆஃபர் மற்றும் இதர சலுகைகள் அறிவித்த அமெரிக்கா !!

November 18, 2021

அமெரிக்கா இந்தியாவுக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 20 ஸ்கை கார்டியன் மற்றும் 10 சீ கார்டியன் ட்ரோன்களுக்கான ஆஃபரை அறிவித்துள்ளது. இது தவிர இந்த ட்ரோன்களுக்காக ஒரு பிரத்யேக பராமரிப்பு மற்றும் சரிபார்ப்பு நிலையத்தையும் இந்தியாவிலேயே அமைத்து தருவதாகவும் அறிவித்துள்ளது. இந்த ஆஃபரில் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட சலுகை தொகை எவ்வளவு என்பது பற்றிய தகவல் ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

லஞ்ச வழக்கில் 2 தரைப்படை இடைநிலை அதிகாரிகள் மற்றும் 1 விமானப்படை சிவிலியன் அதிகாரி சிபிஐ ஆல் கைது !!

November 18, 2021

இரண்டு வெவ்வேறு லஞ்ச வழக்குகளில் தொடர்புடைய 2 தரைப்படை அதிகாரிகள் மற்றும் 1 விமானப்படை அதிகாரியை மத்திய குற்றபுலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. பூனேவில் பணியாற்றி வந்த இரண்டு தரைப்படை ஹவில்தார் அந்தஸ்திலான இடைநிலை அதிகாரிகள் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் முறைகேடு செய்ய ரூ.50,000 லஞ்சம் பெற்ற வழக்கிலும், இந்திய விமானப்படையில் பணியாற்றி வந்த சிவிலியன் அதிகாரி ஒருவர் இடமாறுதல் விவகாரத்தில் ரூ.50,000 லஞ்சம் பெற ஒப்பு கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு தரைப்படை இடைநிலை அதிகாரிகளின் […]

Read More