தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் இரு வேறு என்கௌன்டர்களில் மொத்தம் ஐந்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.குல்கமின் பாம்பே மற்றும் கோபால்போரா ஆகிய இரு இடங்களில் இந்த என்கௌன்டர் நடைபெற்றது. கோபால்போரா பகுதியில் நடைபெற்ற என்கௌன்டரில் ரெசிஸ்டன்ஸ் ப்ரான்ட் எனப்படும் பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர் அபாக் சிக்கந்தர் வீழ்த்தப்பட்டான். இதற்கு முன் குல்கமின் கோபல்போரா மற்றும் பாம்பே ஆகிய பகுதிகளில் பயங்கரவாதிகளின் இருப்பு குறித்து பாதுகாப்பு படைகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அந்த இரு இடங்களையும் பாதுகாப்பு படையினர் சுற்றி […]
Read Moreதெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் கோபால்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையே பயங்கர சண்டை தொடங்கியுள்ளது. தவிர பாம்பே எனும் பகுதியில் மேலும் ஒரு என்கௌன்டர் தொடங்கியுள்ளது.எத்தனை பயங்கரவாதிகள் மாட்டியுள்ளனர் என்பது குறித்த தகவல் இல்லை.
Read Moreதமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி. கயல்விழி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஷண்முக சுந்தரம் ஆகியோர் திருப்பூர் மாவட்டம் அமராவதிநகர் ராணுவ பள்ளிக்கு விசிட் சென்றனர். அவர்களை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்று பள்ளியை சுற்றி காண்பித்தனர் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் அமராவதிநகர் ராணுவ பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அங்குள்ள பலவற்றை தமிழக அரசு […]
Read Moreஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இருவரும் சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில் சீன தரப்பு தனது ஆதிக்கத்தை நிலை நாட்டும் வகையில் நடந்து கொண்டதாக தெரிகிறது. சீனா புதிய தன்னம்பிக்கை மற்றும் உத்வேகத்துடன் செயல்பட்டு வருவதையும் அமெரிக்காவிற்கு எதிரான மற்றும் நிகரான சக்தியாக தன்னை பார்ப்பதையும் இது காட்டுகிறது. மேலும் வல்லுனர்கள் கூறும்போது சீனா அமெரிக்காவுக்கு எதிராக நிகரான சக்தியாக தனது வரவை உலக அரங்கில் பறைசாற்றுவதாக கூறுகின்றனர்.
Read Moreஅடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 170 போர் கப்பல்கள் மற்றும் 320 வானூர்திகளை கொண்ட கடற்படையாக மாற்றம் பெற இந்திய கடற்படை திட்டம் தீட்டி வருகிறது. இதற்கு முன்னர் 130 போர் கப்பல்கள் மற்றும் 230 வானூர்திகளை கொண்ட கடற்படையாக மாற இந்தியா திட்டமிட்ட நிலையில் அதிகரிக்கும் பாதுகாப்பு சவால்கள் காரணமாக திட்டம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்திய கப்பல் கட்டுமான தளங்களில் சுமார் 39 போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் கட்டபட்டு வருகின்றன, மேலும் இரண்டு […]
Read Moreதுபாயின் அல் மக்தூம் விமான தளத்தில் நடைபெற்று வரும் துபாய் விமான கண்காட்சியில் நமது இலகுரக தேஜாஸ் பங்கு பெற்றுள்ளது. இந்த கண்காட்சியில் பாகிஸ்தான் மற்றும் சீன கூட்டு தயாரிப்பான ஜே.எஃப்-17 விமானமும் பங்கு பெற்றுள்ளது, இந்த நிலையில் தேஜாஸ் சற்றே அதிகமான வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால் பாகிஸ்தானியர்களுக்கு பொறாமை தொற்றி கொண்டுள்ளது.தேஜாஸின் முக்கோண வடிவம் காரணமாக சமோசா என நக்கல் செய்து வருகின்றனர். சமோசாவிற்கு சாஸ் எங்கே என பல வாசகங்களை பயன்படுத்தி சமுக வலைதளங்களில் […]
Read Moreசமீபத்தில் நான்காவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கியான ஐ.என்.எஸ். வேலா மற்றும் விசாகப்பட்டிணம் ரக நாசகாரி கப்பலான ஐஎன்எஸ் விஷாகப்பட்டினம் ஆகியவை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த இரண்டு கப்பல்களும் தற்போது முறைப்படி இந்திய கடற்படையில் இணைந்து தங்களது சேவையை துவங்க உள்ளன. இதற்கான விழாக்கள் 21 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் கப்பலுக்கான விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஐ.என்.எஸ் வேலாவுக்கான விழாவில் கடற்படை தலைமை தளபதி கரம்பீர் […]
Read Moreஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் உள்ள அல் மக்தூம் விமானப்படை தளத்தில் மிகப்பெரிய விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் நமது சொந்த தயாரிப்பான இலகுரக தேஜாஸ் போர் விமானம் நிறுத்தப்பட்டு இருந்த நிலைக்கு மரியாதை நிமித்தமாக பாகிஸ்தான் விமானப்படை அதிகாரிகள் சென்றனர். அப்போது அவர்கள் தேஜாஸ் போர் விமானத்தின் விமானி அறையை அருகில் சென்று பார்வையிட்டனர் இது பலத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது. எதிரி நாட்டவர்களை அருகில் அனுமதித்ததே தவறு என ஒரு சாராரும்ஆனால் […]
Read Moreமஹாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரில் இருந்து செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்று நாட்டின் முதலாவது ஆயுதம் தாங்கிய ட்ரோனை தயாரித்து வரலாறு படைத்துள்ளது. Economic Explosives Limited (EEL) எனப்படும் அந்த நிறுவனமானது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள் மற்றும் மிதவை குண்டுகளை தயாரித்துள்ளது. இவற்றை திங்கட்கிழமை அன்று இந்திய கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் ராவத்துக்கு அந்த நிறுவனம் காட்சிபடுத்தியது. அந்த நிறுவன அதிகாரிகள் கூறும்போது தங்களது தயாரிப்புகளை இந்திய எல்லையோரம் […]
Read Moreஇந்திய விமானப்படை தனது இலகுரக தேஜாஸ் போர் விமானங்களுக்காக ஃபிரான்ஸ் நாட்டிடம் ஹாம்மர் ஏவுகணைகளை ஆர்டர் செய்துள்ளது. இந்த ஆர்டர் மூலமாக தேஜாஸ் போர் விமானத்தின் திறன்கள் அதிகரிக்கவும் வலுப்படவும் உள்ளது என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஹாம்மர் ஏவுகணைகளை பயன்படுத்தி எந்த விதமான நிலப்பரப்பிலும் உள்ள பங்கர்களை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முப்படைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களின் கீழ் வாங்கப்படும் இந்த ஏவுகணைகளால் சுமார் 70கிலோமீட்டர் தொலைவில் உள்ள […]
Read More