
2021ஆம் ஆண்டு நிறைவடைய ஒன்றரை மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் தற்போது வரை 138 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 55 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 700க்கும் அதிகமான உதவியாளர்களும் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மத்திய ரிசர்வ் காவல்படை சமீபத்தில் நடைபெற்ற பொதுமக்கள் மீதான தாக்குதலை அடுத்த அடுத்த ஒரு வாரத்திற்குள் 5500 வீரர்களை காஷ்மீருக்கு அனுப்பி வைக்க உள்ளது,
மேலும் கடந்த மாதம் தான் சுமார் 25 கம்பனி படையினரை ஜம்மு காஷ்மீருக்கு மத்திய ரிசர்வ் காவல்படை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.