
அடுத்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வர உள்ளார் அப்போது இந்தியா ரஷ்யா இடையே அடுத்த 10 ஆண்டுகளுக்கான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடிப்படையில் இது ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகும், 2031ஆம் ஆண்டு வரை புதிய அதிநவீன எதிர்கால ராணுவ தொழில்நுட்பங்களை பரிமாறி கொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
குறிப்பாக நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆராய்ச்சிகளுக்கு மிகப்பெரிய அளவில் இந்த ஒப்பந்தம் உதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.