Day: November 10, 2021

ரஷ்யாவின் புதிய எஸ்550 வான் பாதுகாப்பு அமைப்பு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தகவல் !!

November 10, 2021

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு சமீபத்தில் பேசும்போது ரஷ்யா எஸ்550 எனும் புதிய வான் பாதுகாப்பு அமைப்பு தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார். இந்த எஸ்550 வான் பாதுகாப்பு அமைப்பானது எஸ்500 வான் பாதுகாப்பு அமைப்பை விட பன்மடங்கு நவீனத்துவம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரஷ்ய எல்லைகளில் உள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க தயாராக வேண்டும் எனவும் குறிப்பாக வான் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் […]

Read More

நீர்மூழ்கி தகவல்கள் வெளியான விவகாரம் ரகசிய தகவல்கள் சட்டத்தை பயன்படுத்த சிபிஐ கோரிக்கை !!

November 10, 2021

சமீபத்தில் இந்திய கடற்படை நீர்மூழ்கிகள் பற்றிய மிக முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு வெளியிட்டதாக முன்னாள் இன்னாள் கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களை சிபிஐ விசாரித்த போது பல முக்கிய தகவல்கள் வெளியானது தெரிய வந்த நிலையில் ரகசிய தகவல்கள் சட்டத்தை அமல்படுத்த சிபிஐ அனுமதி கோரி உள்ளது. இவர்கள் பணத்திற்காக நீர்மூழ்கிகள் பற்றிய மிக முக்கியமான தகவல்களை எதிரி நாட்டவர்களுடன் பகிரந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்தியா நடத்தும் பன்னாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கும் ஆஃப்கன் பற்றிய உச்சிமாநாடு !!

November 10, 2021

தலைநகர் தில்லியில் இந்தியா பன்னாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசர்களை அழைத்து ஆஃப்கன் பற்றிய கருத்தரங்கு ஒன்றை நடத்துகிறது. இந்த கருத்தரங்கில் ஏழு நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்டுனர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை தாங்கினார். ஈரானுடைய அட்மிரல் அலி ஷம்கானி, கஸகஸ்தானுடைய கரீம் மஸிமோவ், கிர்கிஸ்தானுடைய மராத் முகானோவிச் இமான்குலோவ், ரஷ்யாவின் நிகோலாய் பி பத்ருஷேவ், தஜிகிஸ்தானுடைய நஸ்ரூல்லோ ரஹ்மாத்ஜோன் மஹ்மூத்ஸோதா, துர்க்மேனிஸ்தானுடைய சரிமைராத் ககாலியேவிச் அமவோவ் மற்றும் உஸ்பெகிஸ்தானுடைய விக்டர் […]

Read More

எல்லை பிரச்சினைகளில் சீன அதிபர் ஜின்பிங்கின் நேரடி தலையீடு ஒப்பு கொண்ட சீன ஊடகம் !!

November 10, 2021

சீன அரசு ஊடகமான ஸின்ஹூவா சீன கம்யூனிஸ்ட் கட்சியை புதிய பாதையில் அழைத்து செல்லும் ஜி ஜின்பிங் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தி கட்டுரையில், டையோ தீவுகள், தென் சீன கடல்பகுதியில் உள்ள பிரச்சினைகள், இந்திய சீன எல்லை பிரச்சினைகள், சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கைது செய்யபட்ட சீனர்களை திரும்ப நாடு திரும்ப வைத்தல் என அனைத்திலும் சீன அதிபரின் நேரடி பங்களிப்பு மற்றும் திட்டமிடல் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த […]

Read More

இந்திய கடற்படைக்கு அடுத்த தளபதி நியமனம் !!

November 10, 2021

இந்திய கடற்படையின் தற்போதைய தலைமை தளபதியாக இருப்பவர் அட்மிரல் கரம்பீர் சிங் ஆவார், வருகிற 30ஆம் தேதி இவர் ஒய்வு பெற உள்ளார். அதனை தொடர்ந்து இந்திய அரசு வைஸ் அட்மிரல் ஹரிகுமார் அவர்களை அடுத்த கடற்படை தலைமை தளபதியாக நியமித்து உத்தரவு பிறபித்துள்ளது. இவர் வருகிற 30ஆம் தேதி தலைநகர் தில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் இந்தியாவின் 25ஆவது கடற்படை தளபதியாக பொறுப்பேற்று கொள்வார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர், தேசிய பாதுகாப்பு கல்லூரியின் […]

Read More