Day: November 7, 2021

சீனாவின் ஆயுத ஏற்றுமதி மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஆபத்து !!

November 7, 2021

அதிகரித்து கொண்டே வரும் சீனாவின் ஆயுத ஏற்றுமதியால் இந்திய பிரதமரின் கனவு திட்டமான மேக் இன் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது சீனாவின் குறைந்த விலைலயிலான ஆயுதங்கள் மற்றும் அவற்றை விரைவாக தயாரிப்பதற்கான திறன்களால் சீனாவின் ஏற்றுமதி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சீனாவின் மூன்று ஆயுத நிறுவனங்கள் உலகின் 10 முன்னனி ஆயுத நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன, மேலும் சீனா உலகின் ஐந்தாவது மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக உள்ளது, அந்த வகையில் […]

Read More

C295 ஒப்பந்தத்திற்கு பிறகு மேலதிக ஒப்பந்தங்களை எதிர்பார்க்கும் ஏர்பஸ் நிறுவனம் !!

November 7, 2021

கடந்த சில மாதங்கள் முன்னர் இந்தியா ஏர்பஸ் நிறுவனத்துடன் சுமார் 56 C-295 ராணுவ போக்குவரத்து விமானங்கள் வாங்குவதற்கான ஆர்டரை இறுதி செய்தது. அதே மாதத்தில் கஸகஸ்தான் நாடும் இரண்டு ஏர்பஸ் A400M ரக இடைத்தர ராணுவ சரக்கு போக்குவரத்து விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற AJPAE செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய ஏர்பஸ் டிஃபன்ஸ் மற்றும் ஸ்பேஸ் பிரிவின் தலைவர் மைக்கேல் ஷெல்ஹார்ன், இந்த வருட இறுதிக்குள்ளாக மிகழ்ச்சியான செய்திகளை […]

Read More

28 ஆவது நாளாக நடைபெறும் பூஞ்ச் ஆபரேஷன் !

November 7, 2021

பூஞ்சில் நடைபெற்று வரும் ராணுவ ஆபரேஷனானது இன்று 28ஆவது நாளை எட்டியுள்ளது தொடர்ந்து பயங்கரவாதிகளை ராணுவம் தேடி வருகிறது. தற்போது ரஜோரி – தானமன்டி இடையிலான தேசிய நெடுஞ்சாலை என்கவுன்டரின் பரப்பளவு அதிகரித்துள்ளதால் முடப்பட்டு காப்லா காட்டு பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தற்போது இந்த என்கவுன்டர் பூஞ்ச் மாவட்டத்தின் சுரன்கோட்டி மற்றும் மேந்தார் காடுகளிலும் ரஜோரி மாவட்டத்தின் தானமன்டி பகுதியிலும் நடைபெற்று வருகிறது. இதுவரை 2 இடைநிலை அதிகாரிகள் உட்பட 9 ராணுவ வீரர்கள் […]

Read More

காஷ்மீர் இந்த ஆண்டின் மோசமான மாதமாக பெயர் பெற்ற அக்டோபர் !!

November 7, 2021

தொடரும் பயங்கரவாத சம்பவங்களால் கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் ராணுவம் துணை ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக விளங்கியது. தொடர்ந்து நடைபெற்று வந்த என்கவுன்டர்கள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வீரர்களின் வீர மரணங்கள் ஆகியவை இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. ஆசிரியர்கள் மருத்துவ பணியாளர்கள் என மைனாரிட்டி மக்கள் பின்னர் பிற மாநிலத்தவர் மீதான தாக்குதல்களால் பாதுகாப்பில் பெரும் சவால் உண்டானது குறிப்பிடத்தக்கது.

Read More

உலகின் கடினமான தன்னை தானே சரிசெய்யும் உலோகம் இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!

November 7, 2021

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐஐடி கரக்பூர் மற்றும் இந்திய அறிவியல் படிப்பு மற்றும் ஆய்வு கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் தானே சரி செய்து கொள்ளும் உலோகம் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். இந்த உலோகத்தால் ஒரு நொடியில் தனது சேதங்களை தானாகவே சரி செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலோகம் மற்றும் உலோகங்களை விடவும் 10 மடங்கு கடினமானது என கூறப்படுகிறது. தற்போது உள்ள இந்த வகையிலான உலோகங்களில் பல குறைகள் உள்ளன […]

Read More