Day: November 6, 2021

ஹாலிவுட் பாணியில் உலகை விண்கற்களிடம் இருந்து பாதுகாக்க தயாராகும் நாசா 2022ஆம் ஆண்டு சோதனை !!

November 6, 2021

நாசா அமைப்பானது உலகை விண்கற்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட உள்ளது. அதன்படி வருகிற 2022ஆம் ஆண்டு ஒரு செயற்கைகோளை மணிக்கு 15,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வைத்து விண்கல் ஒன்றின் மீது மோதி சோதனை செய்ய உள்ளது. DART என பெயர் கொண்ட இந்த சோதனைக்கு சுமார் 330 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக டைடிமோஸ் “DIDYMOS” என்ற விண்கல்லை சுற்றி வரும் டிமார்ஃபஸ் […]

Read More

ஒய்வு பெற்ற அமெரிக்க கடற்படையின் அணுசக்தி நீர்மூழ்கிகளை ஆஸ்திரேலியா பெற முயற்சியா ??

November 6, 2021

முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஆக்கஸ் ஒப்பந்தம் வாயிலாக ஆஸ்திரேலிய கடற்படைக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உதவியுடன் குறைந்தபட்சம் 8 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள் கட்டப்பட உள்ளன. ஆனால் ஆஸ்திரேலியா இதுவரை இத்தகைய நீர்மூழ்கிகளை கட்டியதும் இல்லை அவற்றை பெற்று இயக்கியதும் இல்லை ஆகவே அனுபவமின்மை நிலவுகிறது. இதனை போக்க நீர்மூழ்கிகள் கட்டப்படும் காலத்தில் ஒய்வு பெற்ற மற்றும் பெற […]

Read More

பாகிஸ்தான் கடற்படைக்கான நான்காவது கப்பலின் கட்டுமான பணிகளை துவங்கிய துருக்கி !!

November 6, 2021

பாகிஸ்தானுடைய துறைமுக நகரமான கராச்சியில் பாகிஸ்தான் கடற்படைக்கான நான்காவது “அடா” ரக கார்வெட் கப்பலின் கட்டுமான பணிகள் துவங்கியது. இதற்கான விழாவில் பாகிஸ்தான் கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் அம்ஜாத் கான் நியாஸி கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் இந்த கப்பல்கள் பாகிஸ்தான் கடற்படையை வலுப்படுத்தும் என்றார். இந்த கப்பலின் கட்டுமான பணிகள் பாகிஸ்தான் கடற்படையின் ஒரு பிரிவான கராச்சி கப்பல் கட்டுமான மற்றும் பொறியியல் நிறுவனத்தால் (KSEW) கட்டப்பட உள்ளது, இதற்கு துருக்கி தொழில்நுட்ப […]

Read More

அமெரிக்காவிடம் இருந்து கடற்படை பிரங்கிகள் வாங்கும் ஒப்பந்தம் ரத்து !!

November 6, 2021

டொனால்ட் டரம்ப் அதிபராக இருந்த போது இந்தியா அமெரிக்காவிடம் இருந்து கடற்படைக்காக சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பிரங்கிகள் வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. இப்படி 13 மார்க்-45 ரக பிரங்கிகளை வாங்கி இந்திய கடற்படையின் 4 விசாகப்பட்டினம் ரக நாசகாரி கப்பல்கள் மற்றும் 7 நீலகிரி ரக ஃப்ரிகேட்களிலும் பொருத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது இந்திய அரசு நிறுவனமான பாரத் கனரக மின்னனு நிறுவனத்தின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரங்கிளுக்கு சாதகமாக அமெரிக்கா உடனான ஒப்பந்தம் […]

Read More

பிரிட்டனிடம் இருந்து 5 போர் கப்பல்களை பெற உள்ள வங்கதேசம் !!

November 6, 2021

வங்கதேச கடற்படைக்காக அந்நாட்டு அரசு இங்கிலாந்து நாட்டிடம் இருந்து 5 அதிநவீனமான போர்க்கப்பல்களை வாங்க உள்ளது. இவற்றில் 2 வங்கதேச நாட்டிலேயே கட்டமைக்கப்பட உள்ளதாகவும் இதற்கான தொழில்நுட்ப உதவிகளை இங்கிலாந்து செய்ய உள்ளது. மீதமுள்ள மூன்று கப்பல்களும் இங்கிலாந்து நாட்டில் கட்டப்பட்டு வங்கதேச கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வங்கதேச வெளியுறவு அமைச்சர் அப்துல் மொமென் இதை தெரிவித்தார் அவருடன் வெளியுறவு செயலர் மசூத் மற்றும் இங்கிலாந்துக்கான தூதர் சைதா மோனா […]

Read More

சீனா இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான ஆழமான உறவுகளை விரும்பவில்லை அமெரிக்க அறிக்கை !!

November 6, 2021

சீனா பற்றிய அமெரிக்க பாராளுமன்ற குழுவிற்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் சமர்பித்த அறிக்கை ஒன்றில் பல முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அந்த வகையில் சீனா இந்தியா மற்றும் அமெரிக்க இடையேயான ஆழமான உறவுகளை விரும்பவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அமெரிக்க தரப்பை சீன தரப்பு இந்தியா மற்றும் சீனா இடையேயான பிரச்சினையில் தலையிட வேண்டாம் எனவும் தனது எல்லையோர உரிமைகளை நிலைநிறுத்தும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Read More

அமெரிக்க கடற்படை கப்பலை நெருங்கி கண்காணிக்கும் ரஷ்ய கடற்படை !!

November 6, 2021

கருங்கடல் பகுதியில் நேற்று அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.எஸ். விட்னி எனும் கட்டளையக போர்க்கப்பல் நுழைந்தது. உடனடியாக உஷாரான ரஷ்ய கடற்படையின் கருங்கடல் படைப்பிரிவு உடனே அமெரிக்க போர்க்கப்பலை நெருங்கி கண்காணிக்க துவங்கியது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செய்தியாளர்களிடம் பேசும்போது அமெரிக்க கப்பல் ரஷ்ய கடற்படையின் பார்வையில் உள்ளதாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இதுபற்றி அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு செல்வதாகவும் அங்கு நேட்டோ படைகளுடன் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Read More