Breaking News

Day: November 5, 2021

கூட்டுப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் ராவத் செக் குடியரசு ராணுவ தளபதியுடன் சந்திப்பு !!

November 5, 2021

இந்தியாவின் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் செக் குடியரசு நாட்டிற்கு சுற்றுபயணமாக சென்றுள்ளார். அங்கு செக் குடியரசின் தரைப்படை தலைமை தளபதியை சந்தித்து பேசினார், அப்போது இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அவர் செக் குடியரசு நாட்டின் வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு துறை இணை அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து பேசினார். முன்னதாக ஜெனரல் பிபின் ராவத் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டு விக்டோவ் தேசிய நினைகத்தில் அஞ்சலி செலுத்தினார்.

Read More

இந்திய எல்லையோரம் மோதல்களை அதிகரிக்க சீனா தயார் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக அறிக்கை !!

November 5, 2021

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தால் சீனாவின் பாதுகாப்பு பற்றிய குழுவிற்கு ஆய்வறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில் இந்தியா மற்றும் சீனா இடையேயான மோதல்கள் பற்றி ஒரு அத்தியாயமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் சீனா தனது வீரர்களுக்கு அதிக உயர பகுதிகளில் இயங்க தீவிரமாக பயிற்சி அளித்து வருவதாகவும், கனரக தளவாடங்களை குவித்து வருவதாகவும் மேலும் பல்வேறு அதிநவின ராணுவ தளவாடங்களை சோதனை செய்துள்ளதாகவும் கடந்த ஆண்டு முழுவதும் முப்படைகள் கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது […]

Read More

சீனா பாகிஸ்தானை விட குறைந்த அளவில் அணு ஆயுதங்களை கொண்ட இந்தியா !!

November 5, 2021

இந்தியா சீனா மற்றும் பாகிஸ்தானை விடவும் குறைவான எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா பற்றி சமீபத்தில் வெளியான பெண்டகன் ஆய்வறிக்கையில் 2030ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 1000 அணு குண்டுகளை படையில் இணைக்க உள்ளதாகவும் தற்போது 200க்கும் அதிகமான அணு ஆயுதங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானும் தனது பங்கிற்கு அணு ஆயுத தயாரிப்பு அது சார்ந்த தளவாட தயாரிப்பு ஆகியவற்றை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது உலகம் முழுவதும் […]

Read More