Breaking News

Day: November 3, 2021

இந்தியாவின் ஹீரோ அபிநந்தனுக்கு பதவி உயர்வு !!

November 3, 2021

கடந்த 2019ஆம் ஆண்டு புல்வாமாவில் நடைபெற்ற மோசமான தற்கொலை படை தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் காவல்படை வீரர்கள் உயிர் இழந்தனர். இதனையடுத்து இந்திய விமானப்படை ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இதையொட்டி இந்தியாவை பழிவாங்கும் வகையில் ஊடுருவிய பாகிஸ்தான் விமானப்படை விமானங்களை இந்திய விமானப்படை விரட்ட தனது விமானங்களை அனுப்பியது. அப்போது தனது மிக்21 ரக போர் விமானத்தில் சென்று பாகிஸ்தான் விமானப்படையின் எஃப்16 போர் விமானத்தை […]

Read More

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் எஸ்500 ஏற்றுமதி செய்ய ரஷ்யா விருப்பம் !!

November 3, 2021

எதிர்காலத்தில் இந்தியா மற்றும் சீனாவுக்கு ரஷ்யா தனது அதிநவீனமான எஸ்500 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய ஃபெடரல் ராணுவ தொழில்நுட்ப அமைப்பின் இயக்குனர் டிமித்ரி ஷூகயேவ் இந்த தகவலை வெளியிட்டு உள்ளார் மேலும் அவர் பேசும் போது ரஷ்ய படைகளுக்கான சப்ளை முடிந்ததும் ஏற்றுமதி துவங்கும் என்றார். இந்தியா மற்றும் சீனா தவிர ரஷ்யாவுடன் நீண்ட நெருங்கிய நம்பகமான உறவுகள் கொண்ட மற்ற நாடுகளுக்கும் இந்த அதிநவீன வான் […]

Read More

சீன ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை, கடும் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா !!

November 3, 2021

சீனா கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு அதிநவீனமான ஹைப்பர்சானிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்தது இதனையடுத்து அனைத்து உலக நாடுகளும் தற்போது இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. தற்போதைய நிலையில் சீனா அமெரிக்காவை ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத்தில் முந்தி விட்டது, ஆகவே அமெரிக்கா ஏற்கனவே நிலவும் பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக கவனமாக இருக்க வேண்டியுள்ளது. இந்தியாவும் சீனாவுடன் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது ஆகவே தாமதம் ஆனாலும் இந்தியா ஹைப்பர்சானிக் ஆராய்ச்சியில் உறுதியாக உள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா […]

Read More

மழைக்காலம் முடிவு நக்சல் பகுதிகளில் காஷ்மீர் போன்ற தீவிர நடவடிக்கைக்கு துணை ராணுவம் தயார் !!

November 3, 2021

சட்டீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் மழைக்காலம் முடிவு பெற்றதையடுத்து நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் மிகப்பெரிய அளவில் அதி தீவிரமான நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதுபற்றி மூத்த மத்திய ரிசர்வ் காவல்படை அதிகாரிகள் கூறும்போது கோப்ரா கமாண்டோ படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் மிகப்பெரிய அளவில் காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்க எவ்வளவு தீவிரமாக ஆபரேஷன்கள் நடைபெறுகிறதோ அதே அளவுக்கு தீவிரமாக நக்சல்களை ஒடுக்க படையினர் தயாராக உள்ளதாக கூறினர். மேலும் நக்சல் எதிர்ப்பு போரில் ஈடுபட்டு […]

Read More

பாதுகாப்பு படையினரால் 1 பயங்கரவாத ஆதரவாளர் பூஞ்சில் கைது !!

November 3, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் பட்டா தூர்ரியான் கிராமத்தை சேர்ந்த பயங்கரவாத ஆதரவாளர் ஒருவனை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே பூஞ்ச் ஆபரேஷனில் கொல்லப்பட்ட ஜியா முஸ்தபா என்ற பயங்கரவாதிக்கும் தற்போது கைது செய்யப்பட்டவனுக்கும் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட பயங்கரவாத ஆதரவாளரின் பெயர் முஹம்மது யாசிர் எனவும் தொடர்ந்து விசாரணையில் உள்ளதாகவும் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

பாகிஸ்தான் கடற்படையில் இணையும் சீன ஏவுகணை ஃப்ரிகேட் கப்பல் !!

November 3, 2021

பாகிஸ்தான் கடற்படையில் பி.என்.எஸ் துக்ரில் எனும் ஆல்ஃபா வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஃப்ரிகேட் போர்க்கப்பல் ஒன்று இணைய உள்ளது. இந்த போர் கப்பலானது சீனாவின் ஹோடாசிங் கப்பல் கட்டுமான தளத்தால் கட்டமைக்கப்பட்டது, இந்த படை இணைப்பு விழா சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 4000 டன்கள் எடை கொண்ட இந்த கப்பலால் மிக தீவிரமாக கப்பல் எதிர்ப்பு விமான எதிர்ப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறைகளில் ஈடுபட முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

Read More