நீர்மூழ்கி தயாரிப்பில் மீண்டும் வரலாற்று பிழை இழைக்குமா இந்தியா ??

  • Tamil Defense
  • October 11, 2021
  • Comments Off on நீர்மூழ்கி தயாரிப்பில் மீண்டும் வரலாற்று பிழை இழைக்குமா இந்தியா ??

இந்தியா ஃபிரான்ஸ் நாட்டிடம் இருந்து தொழில்நுட்ப உரிமைகளை பரிமாற்றம் அடிப்படையில் பெற்று கொண்டு கல்வாரி ரக நீர்மூழ்கிகளை தயாரித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இந்த தொழில்நுட்ப பரிமாற்றதிற்காக இந்தியா மிகப்பெரிய அளவில் பணத்தை கொடுத்து உள்ளது ஆகவே அந்த டிசைனை முழுவதுமாக பயன்படுத்தி கொள்ளாமல் பிழை செய்துள்ளது.

கடந்த காலத்திலும் ஜெர்மனியிடம் இருந்து இதே முறையில் உரிமை பெற்று கட்டப்பட்ட டைப்209 நீர்மூழ்கிகளின் டிசைனை முழுவதுமாக பயன்படுத்தி கொள்ளவில்லை.

இந்த தொழில்நுட்ப பரிமாற்றமானது அடிப்படையான டிசைன் தவிர இன்னபிற விஷயங்களை மாற்றி கொள்ளும் உரிமையை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தென்கொரியா தற்போது ஜெர்மனியிடம் இருந்து உரிமை பெற்று கட்டிய நீர்மூழ்கிகளின் இரண்டாம் தொகுதியை தயாரிக்க உள்ளது.

அவற்றின் அடிப்படை டிசைனில் மாற்றங்கள் ஏதும் செய்யாமல் சுமார் 3000 டன் எஎடை கொண்ட நீர்மூழ்கியை 4000 டன் எடை கொண்டதாகவும்,

பல்வேறு வகையான ஏவுகணைகள் மற்றும் நீரடிகணைகளை சுமக்கும் வகையிலும் அவற்றை வைத்து தாக்குதல் நடத்தும் வகையிலும் கட்ட திட்டமிட்டு உள்ளது.

ஆகவே கல்வாரி ரக நீர்மூழ்கிகளின் தொழில்நுட்ப உரிமையை நாமும் சரியாக பயன்படுத்தி கொண்டு வருங்காலத்தில் நீர்மூழ்கிகளை தயாரிக்க முடியும் என்பதே உண்மை.