தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தானை எச்சரித்ததாக பாதுகாப்பு அமைச்சர் தகவல்

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் ஊடகங்களிடம் பேசிய போது பாகிஸ்தானை நேரடியாக எச்சரித்துள்ளதாக கூறினார்.

அதாவது தொடரும் பயங்கரவாத சம்பவங்களை தொடர்ந்து மீண்டும் தேவைப்பட்டால் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்ததாக அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பிரிவில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி செக்டார்களில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதும்,

ஊடுருவல் முயற்சிகளும் அதையொட்டிய என்கவுன்டர்களும் (தொடரும் பூஞ்ச் என்கவுன்டர்) ஆகியவை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.