
சமீபத்தில் அர்ஜென்டினா பாகிஸ்தான் மற்றும் சீன கூட்டு தயாரிப்பான ஜே.எஃப்-17 ரக போர் விமானத்தை வாங்க விரும்புவதாக வெளியான செய்தியை மறுத்தது.
பல வருடமாக இஸ்ரேல் சுவீடன் போன்ற நாடுகளிடம் இருந்து போர் விமானங்கள் வாங்க விரும்பிய நிலையில் பிரிட்டனுடைய அழுத்தம் காரணமாக அந்த நாடுகள் பின்வாங்கின.
இதற்கு அர்ஜென்டினா மற்றும் பிரிட்டன் இடையே நடைபெற்ற ஃபால்க்லாந்து யுத்தம் ஏற்படுத்திய தீவிர பகை காரணமாக அமைந்துள்ளது.
பிரிட்டன் நாட்டின் மார்ட்டின் பேக்கர் நிறுவனம் தயாரிக்கும் எஜெக்ஷன் இருக்கைகள் மேற்குறிப்பிட்ட நாடுகளின் விமானங்களில் பயன்படுத்தி வரப்படுகிறது, இதில் ஜே.எஃப்17 உம் அடங்கும்.
இந்தியாவின் தேஜாஸ் விமானத்திலும் இந்த வகை இருக்கை தான் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் ரஷ்யாவின் ஸ்வெஸ்டா இருக்கைகளை மாற்றாக பயன்படுத்தி வழங்கலாம்.
அர்ஜென்டினா போன்ற நாட்டிற்கு தேஜாஸ் ஒரு சிறப்பான ஆயுதமாக இருக்கும் அதிலும் தேஜாஸில் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளன.
மேலும் தேஜாஸ் ஒரு சூப்பர்சானிக் போர் விமானமாகும், தற்போது மலேசியா ஒப்பந்தம் செய்து கொண்டால் நிச்சயமாக அர்ஜென்டினா இந்தியா பக்கம் திரும்பும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.