
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் 60 கிலோமீட்டர் நீளமும் வெறுமனே 20 கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஒரு குறுகிய பகுதிதான் சிலிகுரி காரிடார் பகுதி இதுதான் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கும் பகுதி ஆகும்.
இந்த குறுகிய பாதை அரசியல் ரீதியாக பொருளாதார ரீதியாக ராணுவ ரீதியாக புவிசார் அரசியல் ரீதியாக இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்றால் மிகையல்ல அதற்கான காரணங்களை இனி பார்க்கலாம்.
சிக்கன் நெக் அதாவது கோழி கழுத்து என அழைக்கப்படும் இந்த பகுதியில் தான் உலக புகழ்பெற்ற டார்ஜிலிங் தேயிலை விளைகிறது, மேலும் பல்வேறு வகையான அன்றாட தேவைக்கான மரங்கள் இருக்கின்றன.
வடகிழக்கு மாநிலங்களுக்கான ஒரே போக்குவரத்து பாதையாக இது உள்ளது, வடகிழக்கு பகுதிகளுக்கு செல்லும் ஒரே சரக்கு ரயில் பாதை இங்கு தான் அமைந்துள்ளது.
சுமார் 5 கோடி மக்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வாழ்கிறார்கள் இவர்கள் இந்திய பொருளாதாரத்திற்கு கணிசமாக உதவுகிறார்கள், வடகிழக்கு மாநிலங்கள் சுற்றுலாவுக்கு புகழ் பெற்றவை ஆகும்.
இந்த சிலிகுரி காரிடார் வழியாக தான் வடகிழக்கு மாநிலங்கள் சென்று தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான நில தொடர்பை அடைய முடியும் மியான்மர் வழியாக இந்தியா தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நிலப்பகுதி உறவுகளை கொண்டுள்ளது.
மேலும் சிலிகுரி காரிடாரின் ஒரு முனையில் தான் இந்தியா பூட்டான் மற்றும் சீனா இடையேயான முச்சந்தி எல்லை பகுதியான டோக்லாம் அமைந்துள்ளது, மேலும் போர்காலத்தில் இந்த பாதை வழியாக படைகளை விரைவாக நகர்த்த முடியும்.
அந்த வகையில் சிலிகுரி காரிடார் இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் முக்கியமானது மேலும் அருணாச்சல பிரதேச மாநிலம் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது, ஆகவே தான் சீனா இப்பகுதியை நெரிக்க பாரக்கிறது.