
300 ஆண்டு பழமையான ஆயுத தொழிற்சாலைகள் வாரியத்தை கலைத்து இன்று ஏழு புதிய நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
அதற்கான துவக்க விழாவில் இந்திய பிரதமர் கலந்து கொண்டு பேசினார், அப்போது ஆயுத தயாரிப்பில் உள்ள தேக்க நிலையை இது மாற்ற உதவும் எனவும்,
சுதந்திரத்திற்கு பின்னர் தற்போது தான் முதல்முறையாக இந்திய ஆயுத தயாரிப்பின் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் உள்நாட்டு தயாரிப்பை கொண்டே தன்னிறைவு பெற்று இந்தியாவை உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்ற விரும்புவதாகவும் கூறினார்.