தேஜாஸ் தயாரிப்பு பணியில் ஈடுபட உள்ள தனியார் நிறுவனம் !!

  • Tamil Defense
  • October 27, 2021
  • Comments Off on தேஜாஸ் தயாரிப்பு பணியில் ஈடுபட உள்ள தனியார் நிறுவனம் !!

இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்த தேஜாஸ் இலகுரக போர் விமானமானது தற்போது தயாரிப்பு கட்டத்தில் உள்ளது.

தற்போது இந்த விமானத்தின் தயாரிப்பு திட்டத்தில் ஹைதராபாத் நகரை சேர்ந்த VEM TECHNOLOGIES நிறுவனமும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது தேஜாஸ் போர் விமானத்தின் உடலின் மத்திய பாகத்தை மட்டும் மேற்குறிப்பிட்ட நிறுவனம் தயாரித்து கொடுக்க உள்ளது.

இதற்காக சுமார் 1000 கோடி செலவில் 511 ஏக்கர் பரப்பளவில் தெலுங்கானா மாநிலத்தின் ஜரசங்கம் மாவட்டத்தின் யெல்கோய் பகுதியில் தொழிற்சாலை அமைய உள்ளது.

இதற்காக தெலுங்கானா அரசுடன் VEM TECHNOLOGIES நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்து இட்டுள்ளது இந்த கட்டுமான பணிகள் ஐந்து ஆண்டுகளில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.